இலங்கை வெலிகமையில்
உத்தம நபிகள் (ஸல் அலை)அவர்களின் உதயதினவிழா
சிறு மக்கம் என இலங்கைவாழ் முஸ்லிம்களால் சிறப்பித்துக் கூறப்படும் வெலிகமையில் ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக மீலாதுவிழா மற்றும் கந்தூரிவிழாவை நடத்திவரும் அத்தரீக்கத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில் இந்த ஆண்டும்
சங்கைமிகு ஷைகுநாயகம் கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் உஸைனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் தலைமையில்
கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த தினத்தை கௌரவிக்கும்முகமாக இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 18 .19.20. ஆகிய மூன்று தினங்களில் நடைபெற இருக்கிறது.
அவர்களது புஹாரி மஸ்ஜித் மாவத்தையில் உள்ள “பைத்துல் பரக்கா” இல்லத்தில் குத்புகள் திலகம் செய்யிது யாசீன் மௌலானா (ரலி) அவர்களின் அரங்கில் நடைப்பெற உள்ளது.
இவ்விழாவை அலங்கரிப்பதற்காக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பரம்பரையினரான அஹ்லு பைத்துக்கள் ஆலிம் பெருமக்கள் மற்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் மீது அன்பு கொண்ட வெலிகம நகர மக்கள் இவர்களுடன் பல நாடுகளிலிருந்து வருகைப்புரிய உள்ள உலக முஸ்லிம்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இவ்விழாவிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் இந்திய பாராளுமன்ற முன்னால் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர்மைதீன் எம்.ஏ. அவர்களும்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஷபிக்குர்ரஹ்மான் அவர்களும்
மற்றும் துபாயிலிருந்து பாடகர் தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன் மற்றும் அபுல்பரக்காத் ஹக்கியுல் காதிரி
இன்னும் ஆலிம் பெருந்தகைமௌலவி ஷேக்அப்துல்லாஹ் ஜமாலி
காயல் மௌலவி அப்துல்காதிர் மஹ்ழரி இன்னும் பல உலமாபெருமக்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இந் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தென்றல் வானொலி அலைவரிசையில் பிப்ரவரி 20 ஞாயிறு இலங்கை நேரப்படி காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையில் நேரடி அஞ்சல் செய்யப்படுகிறது.
அதன் இணையதள முகவரி slbc.lk இதில்கேட்டு மகிழலாம்.