Friday, February 18, 2011

இலங்கை வெலிகமைக்கு பன்னாட்டு முஸ்லிம்கள் வருகை

இலங்கை வெலிகமையில் நடந்துக் கொண்டிருக்கும் கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் புனித மீலாது பெருவிழாவிற்கு துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையிலிருந்து 17.02.2011 அன்று மாலை ஆன்மீக சகோதரர்கள் பலரும் அவர்களுடன் தீன் இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன் அவர்களும் இலங்கைக்கு புறப்பட்டனர். இலங்கை விமானநிலையத்தில் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் வெப்சைட் பல நாடுகளிலிருந்து வந்திருக்கும் ஆன்மீக சகோதரர்களுக்கு வெலிகமையில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வெலிகமையில் சங்கைக்குரிய அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்களின் திரு இல்லத்தில் 18.02.2011 அன்று அஸர் தொழுகைக்குப் பின் புர்தா ஷரீப் மற்றும் மஹ்ரிப் தொழுகைக்குப்பின் ரசூல் மாலையும் நடைப்பெற்றது. பன்னாடுகளிலிருந்து வருகைப்புரிந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களிடம் நலன் விசாரித்து பேசிக் கொண்டிருக்கும் காட்சி




தேரிழந்தூர் தாஜிதீன் பாடிய புத்தாடை பூணுவேன் பூமனம் பூசுவேன் பாடலை பாடியக் காட்சி