Wednesday, February 16, 2011

புதுப்பொலிவுடன் மீலாதுவிழா கேள்வி-பதில் போட்டி!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புதுப்பொலிவுடன் புதிய வடிவத்தில் நமது வலைதளம் பரிணமிக்கிறது.

புகழுக்குரிய முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த மாதமான ரபீவுல் அவ்வல் நம்மை நெருங்கிவிட்டது. இந்த மாதம் நபி நேசர்களுக்கு வசந்த காலமாகி பெருமகிழ்வை அளிக்கிறது.

இந்த ஆண்டு நமது துபை சபையில் மீலாதுவிழாவை மிகச்சிறப்பாக நடாத்துவதற்கு ஆயத்தமாகி உள்ளோம்.அதன் ஆரம்பம்தான் கேள்வி-பதில் போட்டிக்கு இங்கு! கிளிக் செய்யவும்
(இந்த போட்டி ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் வசிப்பவர்களுக்கு மட்டும்)

இதில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை என்றால் இதைக் கிளிக் செய்து உங்கள் பதில்களை இமெயில் மூலம் அனுப்பிவைக்கலாம்.

அமீரகத்தில் வாழும் அனைத்து தமிழ் அமைப்புகளும் அன்பர்களும் இந்த போட்டியில் கலந்துக் கொள்வதற்கு அறிய வாய்ப்பை ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை வழங்கி இருக்கிறது.
துபை சபையின் அன்பர்கள் தங்களின் நண்பர்களுக்கு இக் போட்டியினை இமெயில் மூலம் எத்திவைக்கும்படி நிர்வாகம் கேட்டுக் கொள்கிறது.

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை துபை நடத்தும் அமீரகம் தழுவிய 32வது வருட மீலாது விழா சிறப்பு கேள்வி பதில் போட்டி

இந்த போட்டியில் பங்கு பெறும் முறைகள்:


1. போட்டிக்கான கேள்விகள் www.irfaan.net இணையதளத்தில் எளிமையான முறையில் கேள்விகளுக்கான பதிலை தருவதற்கு (a), (b), (c) என்ற தேர்வுமுறை அமைக்கப்பட்டிருக்கிறது. உங்களின் பதிலை அதில் ஏதாவது ஒரு ஆங்கில எழுத்தை கிளிக் செய்து பதிவு செய்தால் போதுமானது.

2. உங்க‌ள் ப‌தில்க‌ளை கீழ்க‌ண்ட‌ மின்ன‌ஞ்ச‌ல், ம‌ற்றும் அஞ்ச‌ல் மூலமாக‌ அனுப்ப‌லாம்:
emsmiladnabi@gmail.com
EMS DUBAI COMPETITION, P.O. Box 81029, Dubai, United Arab Emirates.

இமெயில் மூலம் பதில் அனுப்பக்கூடியவர்கள் கேள்வியின் எண்ணை குறிப்பிட்டு அதற்கான பதிலை (a) அல்லது (b) அல்லது (c) என்று குறிப்பிட்டால் போதுமானது.

3. இந்த போட்டியில் அமீரகம் வாழும் தமிழர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் (வயது வரம்பு இல்லை).

4. ஏக‌த்துவ‌ மெய்ஞ்ஞான‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ள் ம‌ற்றும் அவ‌ர்க‌ள‌து குடும்ப‌த்தார்க‌ள் இந்த‌ போட்டியில் க‌ல‌ந்துக் கொள்ள‌ அனும‌தி இல்லை.

5. பதில்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 25/02/2011.

6. விழா குழுவின் தீர்ப்பு இறுதியான‌து.

ப‌ரிசுக‌ள்:

முத‌ல் ப‌ரிசு: துபாய் ‍- சென்னை - துபாய் விமான‌ ப‌ய‌ணச் சீட்டு
இர‌ண்டாம் ப‌ரிசு: 8 கிராம் த‌ங்க‌க் காசு
மூன்றாம் ப‌ரிசு: கைபேசி (Mobile Phone - Nokia E5)
ஆறுதல் பரிசு: கைகடிகாரம் (Wristwatch)
(ஏழு நபர்களுக்கு மட்டும்)

மேலும் விப‌ர‌ங்க‌ளுக்கு : 050 2021829 / 055 8313399 (Abdul Malick)
050 5448149 (K. Ismath)
050 5859681 (Shahul Hameed)