Saturday, January 15, 2011

புனித புர்தா நிகழ்ச்சி





துபாய் : துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 14.01.2011 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு புனித புர்தா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
புர்தா நிக‌ழ்ச்சிக்கு ஏக‌த்துவ‌ மெய்னஞ்ஞான‌ ச‌பை த‌லைவ‌ர் க‌லீபா ஏ.பி. ச‌காபுதீன் த‌லைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முதுகுளத்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் த‌லைமை இமாம் அஹமது பஷீர் சேட் ஆலிம் அவர்கள் கலந்து சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அவர்களுக்கு நினைவு பரிசாக காமூஸ் அறபு-தமிழ் அகராதியை தலைவர் கலீபா A.P.சகாபுதீன் வழங்கி அகராதியைப்பற்றிய அறிமுகத்தை கொடுத்தார்.
அரபு மொழியில் நிகரில்லாப் புலமை பெற்று அது போன்றே பல மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று நடமாடும் பல்கலைக் கழகமாக விளங்கியவர்கள் குத்புல்ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்யி (ரலி) அவர்களால் தூய தமிழில் எழுதப்பட்ட அற‌பு-தமிழ் அகராதி சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும்.

இவ்வகராதி அவர்கள் மகனார் சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்செய்யிது கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய்யி அவர்களின் அயராத முயற்சியின் பேரில் பல நவீன கலைச் சொற்களும் சேர்க்கப்பட்டு கண்மணிநாயகம் ரசூலே கரீம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லாம் அவர்களின் பிறந்த தினத்தை கௌரவிக்கும் முகமாக இலங்கை வெலிகமையில் க‌ட‌ந்த‌ ஆண்டு நடைபெற்ற மீலாதுப் பெருவிழாவில்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய செயலாளரும் ம‌ற்றும் தமிழ்நாடு மாநிலத் தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் அவர்கள் இவ்விழாவில் கலந்து அறபு-தமிழ் அகராதியை வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் மௌலானாமார்களும், ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் பொதுச்செய‌லாள‌ர் முதுவை ஹிதாயத் மற்றும் பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப், இணைச் செயலாளர் கிளியனூர் இஸ்மத், பொருளாளர் முஹம்மது தாவுது, ஆடிட்டர் ஆதம் அப்துல்குத்தூஸ், ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. அஹ‌ம‌து இம்தாதுல்லாஹ் மற்றும் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.













புகைப்படங்கள் - அதிரை அப்தல்ரஹ்மான்