Sunday, January 16, 2011

மதுக்கூரில் சமத்துவ பொங்கல்விழா








அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை மற்றும் மதுக்கூர் ரோட்டரி சங்கம் , இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா 13.01.2011 காலை 10.30மணியளவில் கலீபா அட்வகேட் லியாக்கத் அலி B.sc.,B.L ஹக்கியுள் காதிரிய்யி அவர்கள் வீட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கலீபா அட்வகேட் லியாக்கத் அலி B.sc.,B.L ஹக்கியுள் காதிரிய்யி அவர்கள் தலைமையேற்க , ரோட்டரி சங்கதலைவர் டாக்டர் A.வாஞ்சிலிங்கம் ,ரோட்டரி சங்கசெயலாளர் தேவதாஸ் ,ரோட்டரி சங்க பொருளாளர் செல்வமணி அவர்களும் முன்னிலை வகிக்க அனைத்து மத சகோதரர்களும் பொது மக்களும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .

மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்நிகழ்ச்சிஅமைந்தது

முடிவில் பொங்கல் உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது .மேலும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக அன்னை நர்சிங் கல்லூரி ஏழை மாணவிகளுக்கு பொங்கல் பரிசாக புடவைகள் வழங்கப்பட்டது

தகவல் : கலீபா அட்வகேட் லியாக்கத் அலி ஹக்கியுள் காதிரிய்யி B.sc.,B.L
புகைப்படங்கள் : Er.A.இத்ரீஸ் ஹக்கியுள் காதிரிய்யி,
மதுக்கூர்.