Sunday, January 9, 2011

ஜனவரி 2011 மாதக்கூட்டம்















துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஜனவரி 2011 மாதாந்திரக் கூட்டம் 06.01.2011 வியாழன் மாலை வெள்ளி இரவு இஃஷா தொழுகைக்கு பின் நடைப் பெற்றது.

மௌலானாமார்கள் முன்னிலையுடன்,
இந்த மாதக்கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் M.A அவர்கள் தலைமை வகித்தார்கள்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக அருள்மறையாம் திருமறையிலிருந்து கோட்டைகுப்பம் முஹைதீன் அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.

மதுக்கூர் தாவுது அவர்கள் வஹ்தத்துல் வுஜூது மற்றும் நபிப்புகழ்பாடலையும் பாடினார்கள்.

மன்னார்குடி ஷேக்தாவுது வஹ்தத்துவ் வுஜூது பாடலின் தமிழாக்கத்தையும் கவிதையும் வாசித்தார்.

மதுக்கூர் அலிஅக்பர் ஞானப்பாடலைப் பாடினார்.

இவ்விழாவில் பேசியவர்கள்

மதுக்கூர் முஹம்மது யூசுப் தலைமையுரை நிகழ்த்த அவரைத் தொடர்ந்து
அபிவிருத்தீஸ்வரம் ஜெகபர்தீன் உரை நிகழ்த்தினார்கள். 28 ஆண்டுகள் அமீரகத்தில் ஒரே கம்பெனியில் பணிபுரிந்துவிட்டு கம்பெனியிலிருந்து பணிஓய்வு பெற்று தாயகத்தில் நிரந்தரமாக தொழில் தொடங்குவதற்கு இம்மாதம் இறுதியில் தாயகம் செல்ல இருப்பதாகவும் மதரஸாவின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பை எண்ணி இனி அந்த பொறுப்பை இருக்ககூடிய சகோதரர்கள் எடுத்தக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

ஜெகபர்தீன் அவர்களுக்கு சபையின் சார்பாக அவர்களின் சேவைகளை பாராட்டி கண்ணியமிக்க சையதுஅலி மௌலானா அவர்களும், பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மௌலானா அவர்களும் மற்றும் தலைவர் கலீபா சஹாபுதீன் அவர்களும் பொன்னாடை போர்த்தி கொளரவப்படுத்தினார்கள்.

மன்னார்குடி ஷேக்மைதீன் ,பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மௌலானா,சையதுஅலி மௌலானா,கலீபா சஹாபுதீன் அனைவரும் உரையாற்றினார்கள்.

தௌஃபா பைத்துடன் இனிதே இந்த மாதக்கூட்டம் நிறைவுப் பெற்றது.

புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்