Monday, December 20, 2010

கறுப்பு கர்பலா நினைவு தினம்

மெளலவி அப்துல் ஹமீது நூரி கிராஅத்
=====================================


ஆலிவூர் அபுல்பஸர்
=======================


அப்துல் காதர்
=================


கலீபா A.P.சஹாப்தீன் அவர்கள்
==============================


A.N.M.முஹம்மது யூசுப்
===============================





உலகையே உறையவைத்து உதிரத்தால் எழுதப்பட்ட வரலாற்று நாள். உண்மை ஓய்வெடுக்க பொய்யும், வஞ்சகமும், சூழ்ச்சியும் புத்தாடையென கந்தலை அணிந்து அழகுப்பார்த்த தினம். உலகுக்கே பண்பை போதித்து அன்பால் அனைவரையும் ஆட்கொண்ட எங்களது இருலோக இரட்சகர் எம்பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் புனித குடும்பத்தார்களுக்கு சொல்லவியலா துன்பமும், அநீதியும் இழைக்கப்பட்ட தினம் ,

அப்புனித குடும்பத்தார்களின் கண்ணீரை தாங்கிய பூமீ வெட்கத்தால் தலைகுணிய, எங்கள் அஹ்லபைத்தின பெண்களின் அழுகையின் ஒலியை சுமக்கவியலாத காற்று உறைந்துபோன தினம். எங்கள் புனித நபிகளாரின் புனித எச்சிலால் உடல்முழுதும் சுவைக்கப்பட்ட அருமை பேரராம், வீரச்சீலராம், குத்புமார்களுக்கெல்லாம் தந்தையாம் எங்கள் இமாம் ஹுசைன் (ரலி)சிரம் தந்து உயிர்த்தியாகம் செய்யப்பட்ட கறுப்பு கர்பலா நினைவு தினம் நமது துபை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 16-12-2010 வியாழன் மாலை வெள்ளி இரவு நினைவுக்கூறப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கைமிகு பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மெளலானா அவர்களும், திருமுல்லைவாசல் செய்யது அலி மெளலானா அவர்களும் முன்னிலை வகித்தனர். நிர்வாகத் தலைவர் கலீபா எ.பி.சஹாப்தீன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.நிகழ்ச்சியின் துவக்கமாக மெளலவி அப்துல் ஹமீது நூரி கிராஅத் ஓதினார்கள். வஹ்தத்துல் உஜூது பாடலை மதுக்கூர் தாவுது பாட அதன் தழிழாக்கத்தை ஆலிவூர் அபுல்பஸர் வாசித்தார்கள்.
ஞானப்பாடலை மதுக்கூர் தாவுது பாடினார்கள். மேலும் கர்பலாவை பற்றிய சிறப்பான கவிதையை அப்துல் காதர் படித்தார்கள்.

கலீபா A.P.சஹாப்தீன் அவர்கள் கர்பலாவின் வரலாற்றை நீண்ட உரையுடன் உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார்கள்.புனித குடுப்பத்தார்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தையும், அனீதத்தையும் அனைவரும் புரியும் வகையில் அவர்களின் உரை அமைந்தது.மேலும் ஹஸனைன் மெளலீது கிதாபை சிறப்பான முறையில் விரைவாக அச்சிட்டு தந்த ஆலிவூர் அபுல்பஸர் அவர்களுக்கு சபையின் சார்பாக நன்றியை கூரினார்கள். அதைத்தொடர்ந்து நன்றியுரையை பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் பேசினார்கள்.

வருகைதந்து சிறப்பையெய்த அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு நிகழ்ச்சி செவ்வென நிறைவேறியது.

Thanks - AMIRALI