புதிய கலீபாவான துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் A.P.சகாபுதீன் M.B.A ஹக்கியுல்காதிரி அவர்கள் கடந்த 12.12.2010 அன்று இலங்கை மற்றும் தாயகத்திலிருந்து அதிகாலை துபாய் திரும்பினார்.
கலீபாவை வரவேற்கும் முகமாக கண்ணியமிக்க திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா, பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மௌலானா அவர்களும், மற்றும் பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப், M.S.அப்துல்வஹாப், துணைச் செயலாளர் அதிரை S.ஷர்புத்தீன், இணைச் செயலாளர் கிளியனூர் இஸ்மத், பாடகர் சாகுல்ஹமீது ஆகயோர் ஜமாலியா டெக்னிக்கல்ஸ் அலுவலகத்தில் புதிய கலீபா அவர்களை வரவேற்று பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.
இறைவன் தன்னையறிய நாடியபொழுது
கலீபா என்ற புனிதமிக்க பிரதிநிதி உருவானான்
இறைவனை முழுமையாக உணர்ந்தறிந்த சம்பூரண
ஷெய்கிலிருந்து இந்த கலீபா உருவானார்
இறைவன் தன் தத்துவங்கள் அனைத்தையும் தன்
கலீபாவிற்கு கற்றுதந்து அனுப்பிவைத்தான்
நம் உயிரினும் மேலான நம் ஷெய்கு
அனைத்து விசயங்களையும் ஞானக்கலையின்
உயிரோட்டத்தையும் கற்று தந்து அனுப்பி இருக்கிறார்கள்
ஷெய்குனுடைய பாராட்டுதலையும் பதவியையும்
பெற்று வந்திருக்கும் எங்கள் மரியாதைக்குரிய
கலீபா தலைவர் அவர்கள் மென்மேலும்
ஞானத்திலே பல படித்தரங்களை பெறவேண்டும்
அவர்கள் எல்லாவிதமான வள நலன்களையும் பெறவேண்டும்
துபை ஏகத்துவமெய்ஞ்ஞான சபை மேலும் மேலும் விரிவடைந்து
வளரவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
-கா.மீ.மு.அ.சாகுல்ஹமீது