அன்புடையீர் !
அஸ்ஸலாமு அலைக்கும் .
19.03.2011 சனிக்கிழமை மதுக்கூர் சிவக்கொல்லை A.K.S திருமண மண்டபத்தில்
தரீக்கத்துள் ஹக்கிய்யத்துள் காதிரிய்யா
அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை
மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை
சார்பாக
நம் உயிரினும் மேலான ரசூலே கரீம் ஷல்லல்லாகு அலைஹி வசல்லம் அவர்களின் மீலாதுந்நபி பெருவிழா காலை 9.30 முதல் நடைபெற்றது
ஜனாப் கலீபா முஹம்மது காலிது ஹக்கிய்யுள் காதிரிய் அவர்கள்
அவர்கள் தலைமையேற்க ,
ஜமா அத்தார்கள் முன்னிலை வகித்தனர்
கிராஅத் திணை ஜனாப் M. அல்லாமா அப்துல் கரீம் ஹக்கிய்யுள் காதிரிய் அவர்கள் ஓதினார்கள் .
வரவேற்பினை ஜனாப் N.P.M பக்கீர் முஹைதீன் ஹக்கிய்யுள் காதிரிய் B.S.c., அவர்கள் நிகழ்த்தினார்கள்
நபிப்புகழ்ப்பாவினை ஜனாப் R.செய்யிது சலீம் மௌலானா, ஜனாப் கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கிய்யுள் காதிரிய்,
ஜனாப் M.அஹம்மது கபீர் ஹக்கிய்யுள் காதிரிய் அவர்களும் இசைத்தார்கள் .
சிற்றுரை : மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் இமாம் மௌலவி ஹாஜி ஷேக் அலி ரஹீமி அவர்களும்
மேலப்பள்ளியின் இமாம் மௌலவி முஹம்மது முஹைதீன் நூரி அவர்களும்
திருமக்கோட்டை பள்ளியின் இமாம் மௌலவி ஜாகிர் ஹுசைன் நூரி அவர்களும் வழங்கினார்கள் .
அண்ணல் நபியும் அஹ்லபைத்துகளும் என்ற தலைப்பிலே காயல் பட்டினம் ஜூம்ஆ பள்ளியின் தலைமை கதீப் மௌலவி ஹாபிழ் H.Aஅப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்
சிறப்பு சொற்பொழிவிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு விடையளித்தவர்களில் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன .
ஆண்கள் பெண்கள் என 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது நிஹழ்ச்சியின் சிறப்பு அம்சமாக இருந்தது
நிஹழ்ச்சியின் முடிவில் (1.50p.m) உணவுபொட்டலங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன .
மன நிறைவோடும மகிழ்ச்சியோடும் விழாக்குழுவினர் கலைந்து சென்றனர் , எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே .
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் Er.A. இத்ரீஸ் ஹக்கியுள் காதிரிய்யி அவர்கள்.
தகவல் : கலீபா அட்வகேட் லியாக்கத் அலி ஹக்கியுள் காதிரிய்யி,மதுக்கூர்
புகைப்படங்கள் :Er.A. இத்ரீஸ் ஹக்கியுள் காதிரிய்யி,மதுக்கூர்