Thursday, August 26, 2010
லைலத்துல் பத்ரு நிகழ்ச்சி
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப்பின் லைலத்துல் பத்ரு நிகழ்ச்சி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இன்நிகழ்ச்சிக்கு துபாய் அவ்காப்பிலிருந்து மீடியாவின் டைரக்டர் ஷைய்கு அப்துல்ரஹ்மான் அல்ஜராரி அவர்கள் கலந்து பத்ரு ஸஹாபாக்களின் புனித மௌலுதை ஓதி சங்கை செய்தார்கள்.
சங்கைக்குரிய திருக்குர்ஆன் முழுவதும் ஓதி இன்நிகழ்ச்சியில் ஹதியா செய்யப்பட்டது.
பல அமைப்புகளிலிருந்தும் தரீக்காகளிலிருந்தும் வருகைத்தந்து சிறப்பு செய்தார்கள்.
இன்நிகழ்வில் கண்ணியத்திற்குரிய அலியா டிரேடிங் உரிமையாளர், சமூதாய ஆர்வரளர் முஹம்மது தாவுது காக்கா அவர்கள் கலந்துக் கொண்டார்கள் அவர்களுடன் நாகூர் ஆரீப் அவர்களும் கலந்துக் கொண்டார்கள்.
பதுரு மௌலுதுக்குப் பின் மஹ்ரூப் காக்காவின் பத்ரு யுத்த சொற்பொழிவு நடைப்பெற்று அவர்களைத் தொடரந்து அப்துல்ரஹ்மான் அல்ஜராரி அவர்களும் உரையாற்றினார்கள்.
பெருமானார் ரசூலேக் கரீம் ஸல்லல்லாகு அலைஹிவஸல்லாம் அமர்களின் மீது சஹாபாக்கள் கொண்டிருந்த அளப்பெரிய அன்பினை தனது உரையில் எடுத்துகூறினார்கள்.
ஈமான் அமைப்பிலிருந்து குத்தாலம் லியாக்கத்அலி தாஹா மற்றும் இல்மு அமைப்பின் தலைவர் அப்துல்கதீம் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு தேரிழந்தூர் தாஜ்தீன் பைஜி, மதுக்கூர் சுன்னத் வல்ஜமாஅத்தினரும், லால்பேட்டை ஜமாஅத்தினரும், இன்னும் குத்தாலம் அஸரப்அலி, முஹம்மது ஹனீபா, அடமங்குடி அப்துல்ரஹ்மான், முனாப் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இப்தார் நிகழ்ச்சிக்குப்பின் மஹ்ரிப் தொழுகை அங்கு நடைப்பெற்று விழா இனிதே நிறைவடைந்தது.