Saturday, May 22, 2010
நாகூர் நாயகத்தின் நினைவுதின விழா
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில்
தாஹா நபியின் திருவழித் தோன்றல் காருண்ய நபியின் திருப்பேரர் கருணை கடல் குத்புல் மஜீத் குத்புல் ஃபரீத் செய்யிது சாதாத் செய்யிது அப்துல் காதிர் கஞ்ச ஷவாயி கஞ்சபஷ்
ஷாகுல் ஹமீது மீரான் சாஹிபு காதிரி நாகூரி(ரலி) நாயகத்தின்
453 ம் வருட (உரூஸ்) கந்தூரி விழா மிக பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.
காலை 8.00 மணிக்கு நாகூர் நாயகத்தின் புனித மவ்லிது ஃஷரீப் ஒதப்பட்டது.
மௌலானாமார்களின் முன்னிலையில் நிகழ்ச்சி ஆரம்பமானது.
9.15 மணிக்கு மவ்லவி அப்துல்ஹமீது நூரி அவர்களின் கிராஅத்துடன் விழா துவங்கியது.
மதுக்கூர் முஹம்மது தாவுது அவர்கள் நபிப்புகழ் பாடல்களை பாடினார்கள்.
இந்த விழாவிற்கு எஸ்.எம்.செய்யிது அலி மௌலானா அவர்கள் தலைமை வகித்து தலைமையுரை நிகழ்த்தினார்கள்.
அஹ்லபைத்தின் அகமியம் என்ற தலைப்பில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாத்தலைவர் ஏ.பி.சஹாபுதீன் 30 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.
நாகூர் நாயகத்தின் புகழ் பாடல்களை தேரிழை தாஜிதீன் பைஜி பாடினார்.
குருவின் அவசியத்தை பற்றி பெருமானார் (ஸல் அலை) அவர்களிடம் சஹாபாக்கள் எப்படி நடந்துக் கொண்டா சரித்திரத்தை தொட்டு மஹான்களின் அவசியத்தை எடுத்து கூறி பொதுச் செயலாளர் ஏ.என்.எம் முஹம்மது யூசுப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இஸ்லாமிய பாடகர் புதுக்கோட்டை பாஷா அவர்கள் கலந்து நாகூர் பாதுஷா நாயகத்தின் பாடல்களை நெஞ்சமுருக பாடினார்கள்.
திட்டச்சேரி ஜெகபர்சாதிக் பைஜி அவர்களின் சொற்பொழிவு எல்லோருக்கும் உற்சாகத்தை வழங்கியது.அல்லாஹ் அறியவேண்டுமானால் அல்லாஹ்வை அறிந்தவரிடம் தான் தெரிந்துக் கொள்ளமுடியும் என்று பல உதாரணங்களைக் கொண்டு விளக்கினார்கள்.
கடலூர் ஆசிக் எம்.கே.அப்துல்ரஹ்மான் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் காதர்ஷாகிப் அப்பாஸ் ஷாஜகான் கிளியனூர் இஸ்மத் அதிரை ஷர்புத்தீன் மதுக்கூர் அபுசாலிஹ் பல தரிக்காவிலிருந்தும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் அப்துல்கதீம், உப தலைவர்கள் குத்தாலம் அஸரப்அலி, முஹம்மது பாருக், சங்கமம் தொலைக்காட்சியின் நிறுவனர் முஹம்மது ரபீக் (கலையன்பன்) கலந்துக் கொண்டனர்.
வாணாதிராஜபுரம் முஹம்மது ஹனீபா, கிளியனூர் பஹாவுதீன் பைஜி மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடு கடலூர் ஆசிக் அப்துல்ரஹ்மான் அவர்களும் முஹம்மது ரியாஸ் மற்றும் சபையின் ரூம் சகோதரர்கள் செய்யிது அலி மௌலானா, முஹம்மது தாவூது, ஆதம் அப்துல்குத்தூஸ், நத்தர்ஷா, அமீர்அலி, அஹது, ஜெய்னுதீன், முஹம்மது யூனூஸ், ஷேக்தாவ+து, ஷேக்மைதீன் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு பேனர் வழங்கிய அபுல்பசர் மற்றும் அலங்காரங்கள் செய்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றியினை சபையின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிகழ்ச்சியினை புகைப்படம் எடுத்துக் கொடுத்த மதுக்கூர் ராஜாமுஹம்மது மற்றும் ஒலி ,ஒளி அமைப்பு அதிரை அப்துல்ரஹ்மான்
மற்றும் கணினியில் நிகழ்ச்சி நிரலை ஒளிப்பரப்பிய ஆதம் அப்துல் குத்தூஸ் இன்னும் இந்நிகழ்ச்சிக்காக உதவிய அனைவருக்கும் வருகைப்புரிந்த அனைவருக்கும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக நன்றியினை சமர்ப்பிக்கின்றோம்.
அனைவருக்கும் கந்தூரி வழங்கப்பட்டது.
நாகூர் நாயகத்தின் மௌலூது நிகழ்ச்சி
----------------------------------------------------------
கிராஅத் மௌலவி அப்துல் ஹமீது நூரி
-----------------------------------------------------------
பாடகர் மதுக்கூர் முஹம்மதுதாவூது
------------------------------------------------------------
திருமுல்லைவாசல் செய்யிது அலி மௌலானா
---------------------------------------------------------------
நிர்வாகத்தலைவர் A.P.சஹாபுதீன் BE.M.BA
------------------------------------------------------------
பொதுச் செயலாளர் M.முஹம்மது யூசுப் MA
----------------------------------------------------------------
தீன்னிசைத் தென்றல் தேரிழை தாஜிதீன் அவர்களுக்கு பொன்னாடை
-----------------------------------------------------------------------
திட்டச்சேரி ஜெகபர்சாதிக் பைஜி
-------------------------------------------------------------------------
இஸ்லாமியப் பாடகர் புதுக்கோட்டை பாஷா அவர்களுக்கு பொன்னாடை
----------------------------------------------------------------------
பாடகர் பாஷா அவர்களுக்கு அகில அற்புத நாதர் ஆடியோ CD வழங்கப்பட்டது
------------------------------------------------------------------------
தேரிழை தாஜிதீன் பைஜி
-----------------------------------------------------------------------
சங்கமம் டிவி நிறுவனர் முஹம்மது ரபீக் (கலையன்பன்)
-----------------------------------------------------------------------
குத்தாலம் அஸரப்அலி
---------------------------------------------------------------------
திட்டச்சேரி ஜெகபர்சாதிக் பைஜி
----------------------------------------------------------------------
கிளியனூர் பஹாவுதீன் பைஜி
-------------------------------------------------------------------
கடலூர் ஆசிக் அப்துல்ரஹ்மான் ஹக்கியுல்காதிரி நன்றிவுரை நிகழ்த்துகிறார்
-----------------------------------------------------------------------------