Tuesday, March 23, 2010

அதிரையில் மீலாதுன்னபி பெருவிழா











மார்ச் 4,5 இருதினங்கள் அதிராம்பட்டினத்தில் உத்தம நபிகளின் உதயதின பெரும்விழா உஸ்வத்துன் ஹஸனா மீலாதுவிழா கமிட்டியினரால் நடத்தப்பட்டது.

இந்த கமிட்டியினர் சுமார் 13 ஆண்டுகளுக்கும் அதிகமாக கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்ததினத்தையும், மௌலுது ஷரிபும் மிகச்சிறப்பாக ஓதி விழாக் கொண்டாடி வருகிறார்கள்.

இவ்வாண்டு மார்ச் 4ம் தேதி வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின் ஹஜரத் ஷேக் நஷ்ருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் ரௌலாவில் மௌலுது ஷரீபுடன் விழா ஆரம்பமானது.500 கிலோ அரசியில் உணவு தயாரிக்கப்பட்டு கந்தூரி வழங்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை மாலை சங்கைமிகு அபூபக்கர் (ரலி) அன்னவர்கள் அரங்கில் மீலாது சொற்பொழிவு நிகழ்ச்சி துவங்கியது.

இவ்விழாவினை அதிராம்பட்டினம் ஜமாஅத் தலைவர்கள் முன்னின்று நடத்தி தந்தார்கள்.

இவ்விழாவிற்கு சிறப்பு பேச்சாளர்களாக கலந்துக் கொண்டவர்கள்

எம்.எம்.எஸ்.அப்துல் வஹாப்
பேராசிரியர் அப்துல் காதர்
கவிஞர் தாஹா
மௌலவி ஷபீர்அலி ஆலிம்

மற்றும் சிறப்பு பேச்சாளராக
நல்லசிவம்
(தஞ்சை பல்கலைக்கழகம்)

மற்றும் பலரும் உரை நிகழ்த்தினார்கள்.

இவ்விழாவில் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.அத்துடன் சிறுவர் சிறுமியர்களுக்கு பேச்சுப்போட்டிகளும் நடைப்பெற்றது.

இந்த விழாவில் கலந்துக் கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு டிபன் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டது.

அத்துடன் 200 தொப்பிகள் ஆண்களுக்கு வழங்கப்பட்டது.
வெற்றிப்பெற்ற இருவர்களுக்கு பஜாஜ் மின் விசிறியும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் உள்ளுர் வாசிகளும் பல ஊர்களிலிருந்தும் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்கள் மீது அன்புக் கொண்ட நெஞ்சங்கள் பலரும் திரளாக கலந்து இவ்விழாவினை சிறப்பித்து தந்தார்கள்.

உஸ்வத்துன் ஹஸனா மீலாது விழா கமிட்டியினரான

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினருமான

எம்.அப்துல்ரஹ்மான்
ஷேக்அப்துல்லாஹ்
எம்.அப்துல்காதர்


மற்றும்

வி.டி.ஹஸனா
ரபிஹகமது
காதர் சுல்தான்
ஷேக்காதி
கே.கே.ஹாஜா

ஒருங்கிணைந்து இவ்விழாவினை மிகச்சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.