Wednesday, March 24, 2010

பேராசிரியர் கே.எம்.காதர்மைதீனுக்கு துபாயில் உற்சாக வரவேற்பு






இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவருமான, முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர்மைதீன் எம்.ஏ அவர்கள் மார்ச் 23 மாலை 5.00 மணிக்கு பல நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதற்கு நான்கு நாட்கள் பயணமாக துபாய் வந்துள்ளார்கள்.

அவர்களை வரவேற்கும் முகமாக ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர், துணைத் தலைவர்கள், மற்றும் செயலாளர்கள் விமான நிலையம் சென்று வரவேற்பளித்தனர்.

மார்ச் 25 வியாழன்கிழமை இரவு 8.30 மணிக்கு ஈடிஏ அஸ்கான் ஹவுஸில் காயிதேமில்லத் பேரவையின் 62 ஆம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

மார்ச் 26 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் நிகழவிருக்கும் நிகழ்ச்சியில் பேராசிரியர் கலந்து அறபு-தமிழ் அகராதி மற்றும் மனிதா நூல் வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.