Tuesday, March 16, 2010

ஆழியூர்: மீலாது விழா கொண்டாட்டம்





நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆழியூரை சேர்ந்த சகோதரர் அஹமது கபீர் (சிங்கப்பூர்) கடந்த 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தனது இல்லத்தில் நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் புனித மீலாது விழாவை மிக விமர்சையாக நடத்தினார்.

இந்த புனித நிகழ்வில் உள்ளுர் மற்றும் வெளியூரிலிருந்து எம்பெருமானர் (ஸல்) அவர்களின் மீது அன்பு கொண்ட நல்உள்ளங்கள் பெரும் திரளாக வந்து கலந்து சங்கை செய்தார்கள். சிறார்களும் பெரியவர்களும் மிக உற்சாகத்தோடும் ஆனந்தத்தோடும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

விழாவின் ஆரம்பமாக நாகூரை சேர்ந்த இஸ்லாமிய இன்னிசை பாடகர் கனி தமது பிரசித்தி பெற்ற "ஏகனே யா அல்லாஹ்" எனும் இறை புகழ் பாடலை பாடி அதன் தொடர்ச்சியாக பல நபி புகழ் பாடல்களை பாடினார்.

அதன் பின் மிக அழகான முறையில் சுபுஹான மௌலீது ஓதப்பட்டது. புனித மௌலீது ஷரீஃப் ஓதிமுடிந்தப் பின் ஆழியூரை சேர்ந்த 100 வயது பெரியவர் ஒருவர் ஸய்யிதுமார்கள் ஸாதாத்துமார்கள் மற்றும் ஏனைய அவ்லியாக்களின் பொருட்டால் மிக சிறப்பான து'ஆவை ஓதி எல்லாம் வல்ல ஏக இறையிடம் இரு கரம் ஏந்தி இரைஞ்சினார்.

ரஹ்மத்துன்லில் ஆலமீனாம் எம்பெருமானர் (ஸல்) அவர்களின் புகழ் பாக்கள் ஆழியூரின் எட்டுத்திக்கும் ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கப்பட்டது.

பின்பு கொடிக்கால்பாளையத்தை சேர்ந்த சகோதரர் பஷீர் நமது உயிரினும் மேலான சங்கைக்குறிய ஷைகு நாயகம் இமாம் ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலான நாயகம் அவர்களால் இயற்றப்பட்ட நபி புகழ் பாடலான "பன்னிரண்டு நாளிதே" எனும் பாடலை உனர்ச்சிகரமாக பாடினார்.

அதன் தொடர்ச்சியாக மீண்டும் நாகூர் கனி பல நபி புகழ் பாடல்களை பாட அதன் பின் கந்தூரி உணவு பரிமாரப்பட்டு மீலாது விழா கொண்டாட்டம் புனித ஸலவாத்துடன் இனிதே நிறைவேறியது.

-தகவல் அக்பர் ஷாஜகான்