Sunday, December 27, 2009
முஹர்ரம் பிறை 10 கர்பலா நினைவலை நிகழ்ச்சி
முஹர்ரம்பிறை 10 –ல் சனிக்கிழமை ஞாயிறு இரவு இஷா தொழுகைக்குப் பின் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கர்பலா நினைவு தினத்தை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு மௌலானாமார்கள் முன்னிலை வகித்தார்கள் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர் தலைமை வகித்தார்.
விழாவின் ஆரம்பமாக துணைத்தலைவர் காதர்ஷாகிப் கிராத் ஓதினார்.பின் மதுக்கூர் பாடகர் தாவுத் அவர்கள் ஹுவல் வுஸூது பாடலைப்பாட மன்னார்குடி ஷேக்தாவுது அதன் தமிழாக்கத்தை கூறினார்.
பின் மதுக்கூர் இதிரீஸ் கர்பலா நினைவுப் பாடலை பாடினார்.
ஏ.பி.சஹாபுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
பெருமானார் ஸல்லல்லாஹ_ அலைஹிவஸல்லாம் அவர்களின் பேரர்களான இமாம் ஹஸன் (ரலி) ஹ_ஸைன் (ரலி) அவர்களின் தியாகங்களையும் கர்பலாவின் வரலாற்று சான்றுகளையும் சுமார் ஒரு மணிநேரம் நெஞ்சுறுக உரை நிகழ்த்தினார்.
உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
கர்பலாவின் நினைவலைகளை ஏற்படுத்தும் வண்ணம் பல நிழற்படங்களை சுவரொட்டிகளாக சகோதரர் அக்பர் மற்றும் அமீர்அலி முஹம்மது அலி தாவுது ஆசிக் அப்துல் ரஹ்மான் அப்துல் குத்தூஸ் ஷேக் மைதீன் ஜாகிர் உசேன் முஹம்மது ரியாஸ் மற்றும் சபை அறை நண்பர்கள் பதித்திருந்தார்கள்.
இரவு 9.30 மணிக்கு இனிதே நிகழ்சி நிறைவடைந்தது.