Monday, July 20, 2009

ஜமாலியாத் தோட்டத்து மலர்கள்...௨


ரசூல் (ஸல்அலை)அவர்களை நமது தாய் தந்தையர் மற்றும் உயிரைவிட அதிகமாக நேசிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள்பால் உள்ள மிகுந்த அன்பால் அவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்போம். அவர்கள் சொன்னதைக் கேட்டு நடந்தால் நமது வாழ்க்கை சீரியதாக இருக்கும். அதற்கு அன்புதான் அடிப்படை. ரசூல்(ஸல்அலை) அவர்கள் கூறியது அனைத்தும் அறிவுதான்...!

எம்பெருமானார்(ஸல்அலை) அவர்களை நேசிக்காமல் இறைவனுடைய நெருக்கத்தையோ அன்பையோ நம்மால் எந்த வகையிலும் அடையமுடியாது. ஒருவன் அவ்வாறு நினைப்பின் அவன் மதிக்கெட்ட மூடனாவான்...!

நபிகள் நாயகம் (ஸல்அலை) அவர்களை அவர்கள் ஹக்கின் பரிபூரணத்தோன்றல் எனும் உட்கருத்துக்காகவும் அவர்களின்றேல் பரிபூரண பரிசுத்த சாந்தமான நல்வாழ்வு மானிடர்கள் எய்தி இருக்கமாட்டார்கள் என்பதற்காகவும் அவர்களின் அருங்குணம் வீரம் செயலற்றும் தன்மை போன்ற மற்ற எண்ணற்ற நற்காரியங்களுக்காகவும் எம் உள் வெளி இரகசியங்கள் கொண்ட பாட்டனார் என்பதற்காகவும் அவர்களை றான் உள்ளார நேசிக்கின்றேன்...!

ஒர் ஊரில் ஒரேயொரு முரீது இருந்தாலும் அவர் ரபீஉல் அவ்வல் மாதத்தில் ஒரு நாளாவது புனித மவ்லிது ஷரீபை ஒதி கந்தூரி கொடுத்து அந்த மாதத்தைச் சிறப்பிக்கவேண்டும்.

கந்தூரி மீலாது விழாக்களைச் சிறப்பாக செய்யுங்கள். நம் ஊரில் மீலாது கந்தூரி செய்வதால் நமக்கு மட்டுமல்ல -நம் எல்லோருக்கும் நன்மையுண்டு பெண்களும் வீட்டில் மவ்லூது ஷரீப் ஒத வேண்டும்.

ஹஸன்-ஹ+ஸைன் (ரலி) மவ்லிதையும் ஒதுங்கள். பத்ரு ஸஹாபாக்கள் மவ்லிதையும் ஒதுங்கள்...!

No comments: