Sunday, July 19, 2009

புனித மிஃராஜ் நிகழ்ச்சி










துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் பெருமானார் (ஸல்அலை) அவர்களின் விண்ணுலக பயணமான புனித மிஃராஜ் நிகழ்ச்சி ஜூலை 19-ல் ஞாயிறு திங்கள் இரவு 7.45 மணிக்கு துவங்கப்பட்டது….
இன் நிகழ்ச்சிக்கு திருமுல்லைவாசல் சைய்யதுஅலி மௌலானா தலைமை வகித்தார்கள்
துணைத்தலைவர் யூசுப் அவர்கள் மிஃராஜ் சிறப்புகளைப்பற்றி வரலாற்று சம்பவங்களை தெளிவாக கூறினார்…அவரைத் தொடர்ந்து கலீபா முஹம்மது காலீத் அவர்கள் மிஃராஜின் தாத்பரியங்களை விளக்கி முப்பது நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.
இறுதியாக தலைமை வகித்த சைய்யதுஅலி மௌலானா அவர்கள் தற்போதைய காலத்தில் விஞ்ஞானிகளும் மிஃராஜ்ஜை பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள் என்றும் ஒவ்வொரு மூமினுக்கும் தொழுகையில் மிஃராஜ் இருக்கிறது என்று பெருமானார் (ஸல் அலை) அவர்களின் திருவாக்கினை எடுத்து கூறி இறுதியாக துவஆ ஒதினார்கள் . இந்நிகழ்ச்சியில் ஜாகித்அலி மௌலானா ஜியாவுதீன் மௌலானா கீழை காதர்சாஹிப் அதிரை சர்புதீன் அதிரை அப்துல் ரஹ்மான் மன்னார்குடி ஷேக்தாவுது பேராவூரணி அன்வர்உசேன் மதுக்கூர் ஹாஜாஅலவுதீன் ஆடிட்டர் கிளியனூர் இஸ்மத் திருமக்கோட்டை தாஜ்தீன் மதுக்கூர் இதயத்துல்லாஹ் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள் இஷாத் தொழுகைக்குபின் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

No comments: