முன்னர் அனைத்துப் பொருளுமாய் இருந்தோம். அதிலிருந்தே நாமும் உருவம் பெற்றோம். இதனாலே வேறுபட்டோம். ஆயினும் நாமும் அனைத்துப் பொருளும் அதனிலிருந்தே வெளியானோம்…
நம் பாட்டனார் ரசூல் (ஸல்அலை) அவர்களின் காலத்திலிருந்து எதிர்ப்புகள் தௌஹீதிற்கு வந்து கொண்டிருக்கின்றன. நாம் வாரிசாக இருப்பதால் நம் காலத்திலும் இது வரவேண்டியது அவசியமாகிவிட்டது. ரசூல் (ஸல்அலை) காலத்திலிருந்த அபூஜஹ்ல் அபூலஹப் ஆகியோரின் சந்ததிகளும் நம் காலத்தில் உள்ளார்கள். ஆதலால் இது விஷயங்களுக்கு நாம் கவலையோ துன்பமோ படவில்லை…
நாம் என்றும் பொய் கூறவில்லை. தௌஹீத் என்று மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் நோக்குடன் பொய்கூறவில்லை. பரிசுத்தமாக உண்மைத் தௌஹீதையே கூறுகிறோம்…
ஊருக்குள் குழப்பங்களை உண்டு பண்ணிக் கொள்வது நம் நோக்கமல்ல. ஊரில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். உண்மையான ஷரீஅத்தையும் தௌஹீதையும் பின்பற்ற வேண்டும் என்பதே நமது நோக்கம்.
ரசூல் (ஸல்அலை) அவர்களுக்கு அதிக எதிரிகள் இருந்தார்கள். அதே போன்று மற்றும் நபிமார்கள், வலீமார்களுக்கும் கடும் எதிரிகளுமிருந்தார்கள். அது ஹக்கினால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெரும்பேறாகும். அவ்வாறே நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் எதிரிகள் இருப்பார்கள். இதனால் நாம் சோதிக்கப்படுவதில்லை. நம் எதிரிகள்தாம் சோதிக்கப்படுகிறார்கள். சோதிக்கப்பட்டு அவர்கள் திருந்தி விடுவார்களாயின் நன்மை பயக்கும். இல்லையாயின் அவர்கள் நிலைமை கவலைக்கிடமானதாகும். எதிரிகள் எம்மை எதிர்ப்பதைவிட அவர்களுடன் ஹக்கு எதிர்க்கப்போவது மிகக் கடுமையானது. மிகப் பயங்கரமான முன்னர் நடந்தவைகள் அந்த எதிரிகளுக்கு உதாரணமாகக் கடவது.
நம்மைப்பற்றி மேலும் துர்வார்த்தைகள் உபயோகித்து தௌஹீதை ஏளனம் செய்வாராயின் நிச்சயம் ஸ_உல்ஹாத்திமாவை அடைவார்கள்…!
-ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மௌலானா
No comments:
Post a Comment