சங்கைக்குரிய குத்புல் இலாஹி கௌதுல் வுஜூதி ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் அலி மௌலானா ஹாஷிமிய் நாயகம் அவர்களுக்கு வாணியம்பாடி இசுலாமியக் கல்லுாரி பேராசிரியர்கள் மரியாதை செய்தபோது
---------------------------------------------------------
24.11.2026 அன்றுமாலை மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர், சென்னையிலுள்ள ஆத்ம சகோதரர் ஹைதர் நிஜாம் அவர்களின் இல்லத்தில் ஒரு சிறப்புமிகு ஆன்மீக மற்றும் இலக்கியச் சந்திப்பு இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வில், வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் ஐயா தி.மு. அப்துல் காதர், பேராசிரியர் முனைவர் மு. முஜிபுர் ரஹ்மான் மற்றும் பேராசிரியர் முனைவர் அ. அப்துல் லத்தீப் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள், சங்கைக்குரிய குத்புல் இலாஹி கௌதுல் வுஜூதி ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் அலி மௌலானா ஹாஷிமிய் நாயகம் அவர்களை நேரில் சந்தித்து, தங்களின் மேலான மரியாதையைச் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியும், ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச்சங்கமும் இணைந்து 03/12/2026 தேதியில் நடத்தவிருக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கான அழைப்பிதழை நாயகம் அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தனர்.
"இறைஞானத் தமிழ் இலக்கிய ஞானி, மறைஞான மாமேதை அஷ்ஷெய்கு நாயகம் அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா வாப்பா நாயகம் அவர்களின் படைப்புகளின் ஊடாக வெளிப்படும் பன்முகத் தமிழ் ஆற்றல்" என்ற தலைப்பில் இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்தரங்கிற்கு உலகளாவிய ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை அன்பர்கள் அனைவரும் திரளாக வருகை தந்து நிகழ்வைச் சிறப்பிக்குமாறு அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டனர்.
இச்சந்திப்பின் நிறைவாக, ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக, வருகை தந்த வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு உரிய முறையில் சிறப்பு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
ஆத்ம சகோதரர் ஏ.என்.எம்.முஹம்மது யூசுப் அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டபோது
ஆத்ம சகோதரர்ஹைதர் நிஜாம் அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டபோது
ஆத்ம சகோதரர் தவ்லத் அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டபோது
ஆத்ம சகோதரர் அப்பாஸ் ஷாஜகான் அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டபோது
ஆத்ம சகோதரர் கிளியனுார் இஸ்மத் அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டபோது
இரவு விருந்துடன் நிறைவுற்றது.








