Showing posts with label கொள்கைகள்-நோக்கங்கள். Show all posts
Showing posts with label கொள்கைகள்-நோக்கங்கள். Show all posts

Thursday, April 29, 2010

லஜ்னத்துல் இர்பானித் தவ்ஹீத்


நன்றி - அபுல்பசர்


1.மதத்தால், இனத்தால் மொழியால் பிளவுப்பட்டுள்ள மனித சமுதாயத்தை ஆன்மீகத்தால் ஒன்றிணைத்து மத நல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் பேணிப் பாதுகாத்தல்.

2. மெய்ஞ்ஞான விளக்கம் நல்கி இறைவனை அறிய வழிக் காட்டுதல்.

3.அனைத்து வேதங்களின் குறிக்கோளும் மெய்ஞ்ஞானத்தில் ஒன்றே எனும் உண்மையை உணரச் செய்யவும், நபிகள் நாயகம் (ஸல்)அவர்களால் அழகுடன் போதிக்கப்பட்ட இஸ்லாத்தின் அழகு நெறி முறைகளை எடுத்துச் சொல்லியும், மக்கள் மத்தியில் நிலைக்கச் செய்து வேற்றுமை நீக்கி, ஒற்றுமை, அன்பு, ஆதியென வளரச் செய்து, எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவவும், சமத்துவம் சகோதரத்துவம் நிலைக்கவும் பாடுபடுதல்.

4.மெய்ஞ்ஞான நூல்கள் வெளியிடல்.

5.யோகப்பயிற்சி மூலம் மெய்யுள வளர்ச்சி பெற்று உள்மறைந்துறையும் மாசக்தியை வெளியேக் கொணர்ந்து தன் வயப்படுத்தல்.

6.மனிதன் தன்னை அறிவதான சுயதரிசன அனுபவம் பெற பயிற்சி அளித்தல்.

7.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்ததின மீலாதுவிழாவினை வெகு சிறப்பாக கொண்டாடுதல்.மேலும் ஞான மகான்களை நினைவு கூர்வதன் மூலம் அவர்களின் கொள்கைகளை நிலைநாட்டல்.

8.நாட்டுப் பற்றுடன் வாழ உதவுதல்.

9.நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்காமலும் மற்றும் சட்டத்திட்டங்களை மதித்து முழுமையாகக் கட்டுப்பட்டு நடத்தல்.

10.தீவிரவாதக் கொள்கைகள் மக்களிடம் பரவாமல் தடுத்தல்.

11.மானிட தேவசக்திகளை அறிந்து, இரண்டறக் கலக்கவும் பூரணத்துவம் அடைய முயலவும் வாய்மையும் சாந்தியும் வாய்ந்த நல் வாழ்வு வாழப்பாடுபடுதல்.

12.மானிட வாழ்க்கையில் இன்றியமையாத சுகாதாரம் முதலான அவசியமான கல்விகளில் தேவையான விளக்கங்களைத் தேவைக்கேற்ப நல்குதல்.

13.கல்விக் கூடங்கள், தொழிற்பயிற்சி கூடங்கள், மருத்துவ பணிமனைகள் அமைத்து மக்களுக்கு சேவைப் புரிதல்.

14.பொது நல சேவைப் புரிதல்.

15.ஆக்கமும் ஆக்கங்களுக்கு உறுதுணை புரிதல்.