சம்பைப்பட்டினம் அப்பா நாயகம் தர்ஹாவில் நடைபெற்ற 79- புனித கந்துாரி விழா மிக சிறப்பாக 13/10/2026 அன்று காலை 10.00 மணிக்கு துவங்கி மதியம் 1.00 மணிக்கு நிறைவுப் பெற்றது இவ்விழாவிற்கு தமிழ்நாட்டில் பல ஊர்களிலிருந்து பக்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள். மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் கலந்துக் கொண்டார்கள்.
அனைவருக்கும் அங்குள்ள ஊர் மக்கள் அனைவருக்கும் மதியம் தப்ரூக் உணவு வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சிகளை போட்டோ எடுத்து வழங்கியவர்
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சகோதரர்
சென்னை சலாவுதீன் ஹக்கியுல்காதிரி
--------------------------------------
கெளதுஸ்ஸமான் அஸ்ஸெய்யித் ஜமாலிய்யா மெளலானா (ரலி) வரலாறு :-
✨ நூற்கள் : அரபுமொழி, அறபுத் தமிழ் மொழிகளில் உரைநடையில் செய்யுள் எழுதுவதிலும் தனித்திறன் படைத்த மெளலானா அவர்கள்
குன்யத்துல் பாஸிலீன். மிப்தாஹுஸ்ஸாலிஹீன், மன்பஅதுல்இல்மிய்யா,
பரா இளுஸ்ஸாலிஹீன், துர்ரத்துல்காமிலீன்,
மன்பஅத்துர் ரஹ்மானிய்யா, பீஅஹ்காமின் நபவிய்யா,
துர்ரத்துல் ஆரிபீன் பீ அக்லாகிஸ்ஸாலிஹீன்
முதலான பல நூல்களை எழுதினார்கள். இந்நூல்களை எல்லாம் இவர்களே அச்சேற்றினார்கள்.
✨ மறைவு : நாடு நகரெங்கும் அலைந்து திரிந்து நாயன் பணியாற்றிய குருநாதர் அவர்கள் இறுதியாக பேராவூரணிக்கு அருகே அமைந்துள்ள சம்பைப்பட்டினம் என்னும் சிற்றூரில் தங்கள் திருக்குடும்பத்தாருடன் இறுதிக்காலம் வரை வாழ்ந்தார்கள்.
நூற்று நாற்பது வயது வரை உடல் நலத்தோடும் பலத்தோடும் வாழ்ந்த மெளலானா அவர்கள் ஹிஜ்ரி 1371 ஜமாதுல் அவ்வல் பிறை 1 திங்கள் ஸுபுஹுக்குச் சற்று முன்பு நான்கு மணிக்கு (28.1.1952) ஏக இறையை அடைந்தார்கள். இவர்களின் திருவுடல் சம்பைப்பட்டிணம் எனும் ஊரிலுள்ள மெளலானா தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மெளலானா அவர்களின் தர்கா ஷரீஃப் அவர்களின் திருப்பேரர் குத்புஸ்ஸமான் ஸம்ஸுல் வுஜுத் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவுன் மெளலானா வாப்பா நாயகம் அவர்களின் முயற்சியில் அழகாக எழிலாக கட்டப்பட்டுள்ளது.
தாங்கள் வாழும்போது பல கராமத்துக்களை நடத்தி மக்களின் நாட்டங்களை நிறைவேற்றிய மெளலானா அவர்கள் மறைவுக்குப் பின்னரும் அவர்களை நாடி நிய்யத் செய்து தேடி வருவோருக்கு பல அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார்கள்.
சங்கைமிகு குத்புஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜூத் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் வாப்பா நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அழீம் அவர்கள்






































.jpg)









