Thursday, October 8, 2026

சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன்அன்சாரியுடன் சந்திப்பு



செப்டம்பர் 2026-22- ஆம் தேதி மனிதநேய ஜனநாயக் கட்சியின் தலைவரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய மு.தமிமுன்அன்சாரி MLA அவர்களை சந்தித்து ஆருயிர் வாப்பா நாயகம் அவர்களின் உமர் ரலி புராணம் இலக்கிய காப்பியத்தை அவருக்கு வழங்கிய தருணம்.
இன்னும் சில புத்தகங்களையும் வழங்கினேன். அவைகளை பார்வையிட்ட அவர் 
இஸ்லாமியர்களின் தமிழ்த் தொண்டுப் பற்றி நான் ஆய்வுச் செய்து பிஎச்டி பண்ணயிருக்கிறேன். அதுசமயம் வாப்பாநாயகத்தின் ஆக்கங்கள் எனக்கு உதவியாக இருக்குமென கூறுினார்.
அது சமயம் வாணியம்பாடி இசுலாமியக் கலு்லுாரி மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடாத்தும்  பன்னாட்டு கருத்தரங்கம் அழைப்பிழை கொடுத்தேன் வாப்பா நாயகத்தின் புத்தகங்களுக்கு திறனாய்வு கட்டுரை தருவதாக கூறினார். மகிழ்ச்சியான சந்திப்பு