ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை
கூட்டுச் சந்திப்பு நிகழ்ச்சி
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை
துபாயில் கடந்த டிசம்பர் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சபை அன்பர்கள் பிற
அமைப்பு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் துபாய் ஜபீல் பூங்காவில் கூட்டுச்
சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
காலை 9.00 மணிக்கு விளையாட்டு
போட்டிகள் துவங்கியது இப்போட்டிகளை கிளியனூர் இஸ்மத், மதுக்கூர் இதயத்துல்லா,
மன்னார்குடி ஷேக்தாவூது ஆகியோர்கள் நடத்தினார். குறிப்பாக பலூன் உடைத்தல், கண்ணைக்
கட்டி நடத்தல், வாளிப் பந்து, சுழல்பந்து விளையாட்டுகள் நடைபெற்றன ஆர்வத்துடன்
அனைவரும் கலந்துக் கொண்டு சந்தோசித்தார்கள்.
ஜும் ஆ தொழுகைக்குப் பின் மதிய
உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஈமான்
அமைப்பிலிருந்து அதன் பொதுச் செயலாளர் குத்தாலம் லியாகத்அலி, தாஹா மற்றும் யாசீன்
ஆகியோர்கள் வந்திருந்து ஒரு விளையாட்டு போட்டியில் அவர்களும் கலந்து மனம்
மகிழ்ந்தார்கள்.
மதிய உணவுக்குப் பின்
குழந்தைகள் நிகழ்ச்சி மற்றும் வினாடி வினா, தொடர் ஓட்டம் என பல போட்டிகள்
நடைபெற்றது.
மாலை சிற்றுண்டியுடன்
சிறப்பான கவிதையை மதுக்கூர் இஸ்மாயில் வாசித்தார். வெற்றி பெற்ற அனைவருக்கும்
மௌலானாமார்களும், சபையின் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் மற்றும் பிற அமைப்பிலிருந்து
வருகைப் புரிந்திருந்த விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினார்கள். குழந்தைகள்
அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிறைவாக நன்றி உரை தலைவர்
கலீபா A.P.சகாபுதீன் கூறினார்.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்தவர்கள் கிளியனூர் இஸ்மத்,
மதுக்கூர் இதயத்துல்லா,
மன்னார்குடி ஷேக்தாவூது மற்றும் மன்னார்குடி அப்துல் மாலிக், அமீர்அலி ஆகியோர்
சிறப்பாக செய்திருந்தனர்.
கண்கட்டி நடத்தல்
பலூன் உடைத்தல்