Sunday, September 9, 2012

குருவின் வேலை


குரு என்பவர் உங்களை உற்சாகப்படுத்த வரவில்லை. உங்களுக்கு ஆறுதல் சொல்வதும் உங்களை தைரியப்படுத்துவதும் ஊக்குவிப்பதும் அல்ல அவர் பணி. நீங்கள் அமைத்து வைத்திருக்கும் சில எல்லைகளைத் தகர்த்து எறிவதுதான் அவர் நோக்கம்.

நீங்கள் சிக்கியிருக்கும் பலவற்றில் இருந்தும் உங்களை விடுவித்து சுதந்திரம் தருவதே அவர் விழைவு. கட்டுண்டு பாதுகாப்பாக இருப்பதைவிட சுதந்திரமாக ஆபத்துகளை எதிர்கொள்வதே உயர்ந்தது

.

ஓர் எறும்பு போகும் பாதையில் விரலை வைத்து மறித்துப் பாருங்கள். அது நின்றுவிடாது. விரல் மீது ஏறிப் போகலாமா அல்லது விரலைச் சுற்றிக்கொண்டாவது போகலாமா என்று முயற்சி செய்யும். எல்லைக்குள் கட்டுப்பட்டு இருப்பது எறும்புக்குக்கூடப் பிடிப்பதில்லை. எந்த உயிராக இருந்தாலும் விடுதலைப் பெறுவதுதான் அதன் அடிப்படை தாகம்.

எதனுடனும் பிணைத்துக் கொண்டு திருப்தியுற உயிரால் முடிவதில்லை என்பதால்தான் எது கிடைத்தாலும் அது வேறு ஒன்றைத் தேடிக்கொண்டே இருக்கிறது. இதுவே முக்திக்கு விழையும் தன்மை. இதை விழிப்பு உணர்வோடு அணுகச் செய்வதே குருவின் வேலை.!

-படித்தேன் பிடித்தது