எம்பெருமானார் (ஸல்)அவர்களின் மீது மீலாதுன்னபீ பெருவிழா மன்னார்குடி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சார்பாக 18.02.0212 சனிக்கிழமை A.S.A திருமண மஹாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முதலாவதாக காலை 10.00 மணிக்கு சுப்ஹான மௌலிது நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊர்ஜமாஅத் நிர்வாகிகளும் மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கலீபாக்களும் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சகோதர சமுதாயத்தார்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.மன்னார்குடி மஹல்லாவைச் சேர்ந்த இமாம்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.ஊர் மக்களும் வெளியூர் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் மதுக்கூர் Er.A.இத்ரீஸ் ஹக்கியுல் காதிரி அவர்கள்.
நன்றியுரை வழங்கியவர் மன்னார்குடி பொரளாளர் A.ஷேக்தாவூது ஹக்கியுல் காதிரி அவர்கள்.
நிறைவாக துஆ ஸலவாத்துடன் இனிதே விழா நிறைவுப் பெற்றது கலந்துக் கொண்ட அனைவருக்கும் தப்ரூக் உணவு வழங்கப்பட்டது.
தகவல் - K.அய்யுப் ஹக்கியுல் காதிரி
செயலாளர்
மன்னார்குடி ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை.