இலங்கை வெலிகமையில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின பெருவிழா தொடங்கியது. பிப்ரவரி 3ம் தேதி பன்னாடுகளிலிருந்தும் முரிதீன்கள் மற்றும் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது நேசம் கொண்டவர்கள் இலங்கையை நோக்கி வரத்தொடங்கினர்.
மாலை 5.00 மணிக்கு கண்மணி நாயகத்தின் பேரில் பாடப்பட்ட புனித புர்தா மஜ்லிஸ் நடைபெற்றது.
வெலிகமையில் வாழும் இஸ்லாமியர்கள் திரளாக வந்திருந்து புர்தா மற்றும் ரசூல்மாலையு ஓதினார்கள்.
பிப்ரவரி 4ம் தேதி காலை 10 மணிக்கு கண்மணி நாயகத்தின் பேரில் மௌலிது ஓதி கந்தூரி வழங்கப்பட்டது.