திருமுல்லைவாசல் சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அவர்களின் புனித ரவ்லா ஷரீப்பில் 16/07/2011 சனிக்கிழமை மாலை அஷர் தொழுகைக்கு பின்
சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவுன் அல்ஹாஷிமிய் மௌலானா அவர்களின் தலைமையில்
அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்ட ஜஉபருல் பர்ஸன்ஜிய் (ரஹ்) அவர்களால் ஆக்கப்பட்ட பர்ஸன’ஜிய் மவ்லித்தை திருமுல்லைவாசல் புனித தந்தை நாயகம் ரவ்லாவில் முதன் முதலாக ஓதப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கண்ணியமிக்க மசூது மௌலானா முன்னிலை வகித்தார்கள். மற்றும் கலீபாமார்கள் பல ஊர்களிலிருந்தும் முரிதீன்கள் திருமுல்லைவாசல் புனித தர்ஹாவிலே ஒன்றுகூடி
ஆருயிர் ஷெய்குநாயகம் பர்ஸன்ஜிய் மவ்லித்தை ஓத அதை பின் தொடர்ந்து அனைவரும் ஓதினார்கள்.
மவ்லித் நிகழ்ச்சிக்குப்பின் அனைவரும் ஷெய்குனாவை சூழ்ந்துக் கொண்டு புகைப்படங்கள் எடுத்தனர்
தலைமை கலீபா அண்ணன் அவர்கள் எடுத்த புகைப்படத்தை ஷெய்குனாவிடம் காண்பிக்க மொபைலில் தேடுகிறார்கள் கிடைக்கவில்லை
புகைப்படம் எடுப்பதைப்போன்று நடிக்கிறார் என்று வாப்பா நாயகம் கூற அனைவரும் சிரிக்கும் காட்சி
இந்த பதிவு சென்னை விமானநிலையத்திலிருந்து............