Tuesday, June 7, 2011

அண்ணல்நபிகளின் அழகிய பொன்மொழி-2

நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்கமாட்டார்கள். அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள்.
யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.

பராஉ (ரலியல்லாஹு அன்ஹு)
புகாரி - 3783

-------------------------------------------------------------------------

என்னைக்கண்ட முஸ்லிமையும் என்னைக் கண்டவரைக் கண்ட முஸ்லிமையும் நரகம் தொடாது என நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் மொழிந்தார்கள்.

அறிவிப்பவர்: செய்யதுனா ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)
திர்மிதி, மிஷ்காத்

-------------------------------------------------------------------------

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்:
" மேலும் எனக்குப் பின்னால் உங்களில் ஜீவித்து இருப்பவர்கள் அதிகப்படியான குழப்பங்களை காண்பீர்கள். அந்நேரத்தில் என் ஸுன்னத்தையும் நேர்வழி பெற்ற வழிக்காட்டிகளான என் கலீபாக்களின் ...ஸுன்னத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் அவற்றின் மீது உங்களின் கடைவாய்ப்பற்களை வைத்து கடித்து பிடித்துக் கொள்ளுங்கள்.

(திர்மிதி: 2676, இப்னு மாஜா: 42, அபூதாவுத்: 4607, முஸ்னத் அஹ்மத் : 4 - 126, மிஷ்காத்:165

----------------------------------------------------------------------------

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்:
" எனது ஸஹாபாக்களை சங்கை செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் தான் உங்களில் மிக சங்கையானவர்கள் ஆவார்கள்."
மிஷ்காத்: 6012, முஸ்னத் அஹ்மத்: 1 - 26

-----------------------------------------------------------------------------

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் (சஹாபாக்கள்) அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தாபிஈன்கள்) அவர்களுக்கும் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்...து வருபவர்கள். (தப அத்தாபிஈன்கள்) பின்னர் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக் கொள்ளும்-. இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹுல் புகாரி - 3651

--------------------------------------------------------------------------