துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் கலீபா ஏ.பி.சஹாபுதீன் அவர்கள் தனது குடும்பத்தாருடன் புனித உம்ரா சென்றுவிட்டு 14/06/2011 அன்று திரும்பி உள்ளார்கள்.
அவர்களை வரவேற்கும் முகமாக சபை சகோதரர்களும் நிர்வாகத்தினரும் 15/06/2011 அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பின் அவர் இல்லம் சென்று பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.
முஹம்மது மாதிஹ் அவர்களுக்கு ஜியாவுதீன் மௌலானா மற்றும் அதிரை ஷர்புதீன், ஷேக்தாவுது பொன்னாடை அணிவித்தார்கள்
கலீபா ஏ.பி.சஹாபுதீன் அவர்களுக்கு மூத்த சகோதரர் எம்.எஸ்.அப்துல்வஹாப் மற்றும் சாகுல்ஹமீது பொன்னாடை அணிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு முஹம்மது யூசுப், கிளியனூர் இஸ்மத், அதிரை அப்துல்ரஹ்மான், ஜாகிர்உசேன், அபுல்பசர், அக்பர் ஆகியோர்களும் கலந்து தங்கள் வாழ்த்தினை வழங்கினார்கள்.
வருகைத்தந்த சகோதரர்களுக்கு ஜம்ஜம் தண்ணீர் மற்றும் பேரிச்சைப்பழம் வழங்கப்பட்டது.