Friday, April 8, 2011

சம்பை மற்றும் துபாயில் புனித கந்தூரி ஜியாரத்விழா

கடந்த 06/04/2011 அன்று சம்பைபட்டனத்தில் ஞானமகான் வலிய்யுல்அக்பர் சைய்யதுனா ஜமாலிய்யா செய்யிது முஹம்மது மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்களின் 62வது புனித கந்தூரி ஜியாரத் விழா மிகசிறப்பாக சங்கைமிகு ஏ.சைய்யிது மஸ்ஊது மௌலானா அல்ஹாதி அவர்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. புகைப்படங்கள் – மதுக்கூர் இத்ரீஸ் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 08/04/2011 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு புனித புர்தாஷரீப் ஓதப்பட்டது அதைத் தொடர்ந்து

சம்பைப்பட்டினம் – மறவன் வயல் மௌலானா தோட்டத்தில் மறைந்து வாழும் ஞானமகான் வலிய்யுல் அக்பர் செய்யிதுனா ஜமாலிய்யா செய்யிது முஹம்மது மௌலானா அல்ஹஜனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்களின் நினைவு கந்தூரிவிழாவும் மற்றும் ஏப்ரல்மாதக் கூட்டமும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கு கண்ணியமிக்க மௌலானாமார்கள் மற்றும் நிர்வாகத்தலைவர் கலீபா சகாபுதீன் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்திற்கு தலைமை திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா வகித்தார்கள்.

இம்மாதத்திலிருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் தொகுப்பாளராக பயிற்சி பெறவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் முஹம்மது யூசுப் அறிவித்து இந்த மாத நிகழ்ச்சியை மிக அழகாக தொகுத்தும் வழங்கினார்.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிராஅத்
மௌலவி அப்துல்ஹமீது ஹக்கியுல்காதிரி
வஹ்தத்துல்வுஜீத் பாடல் கொடிக்கால்பாளயம் அலாவுதீன்
தமிழாக்கம் – மன்னார்குடி ஷேக்தாவுது
ஞானப்பாடல் – மதுக்கூர் சாகுல்ஹமீது
நபிப்புகழ்பாடல்- மதுக்கூர் முஹம்மது தாவுது
மதுக்கூர் பாடகர் – முஹம்மது இத்ரிஸ்

பேச்சாளர்கள்
திருமுல்லைவாசல் சையது அலி மெளாலானா அவர்கள் அப்பா நாயகத்தின் வரலாற்றுச் சுவடுகளை எடுத்து கூறினார்கள்.

அவர்களைத்தொடர்ந்து ஷாஜகான் உரையாடி வாப்பா நாயகத்துடன் பயணித்த அனுபவங்களையும் அவர்களிடமிருந்து பெற்ற தொப்பியைப் பற்றியும் நினைவுகூர்ந்து பேசினார்.

அவரைத் தொடர்ந்து அதிரை அப்துல்ரஹ்மான் சம்பையின் சிறப்புகளையும் சம்பை தர்ஹாவின் சிறப்புமிகு பணிகளைப் பற்றியும் அதில் அனைவரும் கலந்து தங்களின் பங்களிப்பை வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து மௌலவி அப்துல்ஹமீது அவர்கள் வலிமார்களின் சிறப்புகளை கூறினார்கள்.

அவரைத் தொடர்ந்து மதுக்கூர் ராஜாமுஹம்மது மெய்ஞ்ஞான பேரின்ப விளக்கங்களை மிக துரிதமாக உரையாடிச் சென்றார்கள்.

மதுக்கூர் நஜ்முதீன் மஹான்களின் சிறப்புகளை கூறினார்.

நிறைவாக நிர்வாகத்தலைவர் கலீபா சகாபுதீன் அவர்கள் அப்பாநாயகத்தின் சிறப்புகளை எடுத்தியம்பினார்கள்.

அதைத் தொடர்ந்து தௌபா பைத் மற்றும் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டு இனிதே நிகழ்ச்சி நிறைவடைந்தது. புகைப்படங்கள் ஆடியோ - அதிரை அப்துல்ரஹ்மான் மற்றும் முதுவை அகமது ஹிம்தாதுல்லாஹ்