Tuesday, April 5, 2011

சிறப்புமிகு இராத்திபத்துல் காதிரிய்யா

துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் 04/04/2011 திங்கள்கிழமை மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் சங்கைமிக்க ஞானமகான், வலிய்யுல் அக்பர், செய்யிதனா ஜமாலிய்யா செய்யிது முஹம்மது மௌலானா அல்ஹஷனிய்யுல் ஹாஷிமி (ரலி) அவர்களின் 62வது புனித கந்தூரி ஜியாரஅத் விழாவை முன்னிட்டு இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மௌலானாமார்கள் மற்றும் முரிதீன்கள் கலந்து சிறப்பித்தார்கள். நிர்வாகத் தலைவர் கலீபா சிஹாபுதீன் உரைநிகழ்த்தினார்.

இன்ஷாஅல்லாஹ் 08/04/2011 வெள்ளிக்கிழமை காலை சபையில் புர்தா ஷரீபுடன் சம்பை ஜியாரத் விழாவும் மிக சிறப்பாக நடக்க இருக்கிறது; ஆதலால் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து எம்பெருமானார் (ஸல் அலை) அவர்களின் திருகுடும்பத்தினர்களை கொண்டும் வலிமார்களின் வஸிலாவைக் கொண்டும் எல்லாம் வல்ல ஏக இறைவன் நமக்கு ஈருலக நற்பேரினையும் அருள்வானாக ஆமின்.




புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்