நினைவினில் நிலை மனமே
நினைவினில் நிலை மனமே
உயர்வினை குருமனம் அடைதனிலே!
கருவினில் கலந்த நிலையதுப்போல்
உருவினில் உமைத்தொழ உதவிடவே!
கடலலை கரைத்தொட விரைவதுப்போல்
அனுதினம் அகமியம் அறிந்திடவே! [நினைவினில்]
அருவமும் உருவினை வெளிப்படவே - பல
துருவமும் உருவதில் மறைந்ததுவே!
சமவெளிச் சமைத்த இடைவெளியில்
விடைக்கொணர் திரைதனை நிறைத்திடவே! [நினைவினில்]
விதையது மரமென வெளிப்படவே
மறந்தன மரமது விதையதுவே!
மரமது பொருளென உருப்பெறவே
பொருளது மறைத்தது மரமதுவே! [நினைவினில்]
ஒன்றெனத் தென்றலும் உழல்வதுப்போல்
நின்றுமை அண்டிடல் ஒன்றிடவே!
நிகரிலா சிகரத்தின் சிரமதுப்போல்
பணிவது மனமதில் படர்ந்திடவே! [நினைவினில்]
இருந்தன இருப்பன இகமுழுதும்
கடந்தன படர்ந்தன பலனிலையாம்!
சிறந்தன இவையினுள் இருப்பனவாம்
சிரமது பணிந்திடும் குருப்பதமே! [நினைவினில்]
அமீர்அலி ஹக்கியுல்காதிரி
துபாய்