Saturday, June 12, 2010

பொதுக்குழு கூட்டம்


துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 11.06.2010 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின் மாதாந்திரக் கூட்டமும் அதன் தொடர்ச்சியாக பொதுக்குழுவும் நடந்தேறியது.

நிகழ்ச்சியின் துவக்கமாக துணைத்தலைவர் காதர் ஷாகிப் கிராஅத் ஓதி துவங்கினார்.
அலாவுதீன் மதுக்கூர் சாகுல்ஹமீது பாடல்கள் பாட மன்னார்குடி ஷேக்தாவுது தனது முதல் கவிதையை அரங்கேற்றினார்.

நிர்வாகத்தலைவர் ஏபி.சஹாபுதீன் பொதுக்குழுவை துவங்கினார்.

புதிய நிர்வாகத்திற்கு பின் ஐந்து முறை நிர்வாகக்கூட்டம் நடந்தேறியுள்ளது.அதன் நிமித்தம் விவாதிக்கப்பட்ட காரியங்களை செயல்படுத்தப்பட்டது எத்தனை என்பதையும் செயல்படுத்தப்படாமல் இன்னும் எழுத்தளவில் அப்படியே இருப்பது எத்தனை என்பதையும் விரிவாக ஆராய்ந்து பேசினார்.

பெருமளவில் இந்நிகழ்ச்சிக்கு வருகைப்புரிந்தனர்.

பொதுச்செயலாளர் ஏஎன்எம்.முஹம்மது யூசுப் மற்றும் திண்டுகல் சாகுல்ஹமீது காதர்ஷாகிப் தங்களது கருத்துக்களை பதிவு செய்தார்கள்.

சலவாத்துடன் இனிதே கூட்டம் நிறைவு பெற்றது.