Tuesday, June 1, 2010

ஏகத்துவப் புரட்சி



கனவிலும் நினைவிலும் கண்டக் காட்சி
எங்கும் குருநாதரின் திருக் காட்சி
உடலைப் பார்த்து பார்த்து தெளியாத வறட்சி
உள்ளமையை ஏற்றபோது அறிவில் முதிர்ச்சி!

குரு அருகில் இருப்பது ஒருபயிற்சி
குருவில் அழிவதுதான் பெரும்தேர்ச்சி
அறியாத அறியாமை புறக் காட்சி
அகண்டுவிடும் அறியாமையே அகக் காட்சி!

தன்னை ஆய்ந்து அறிவதே ஆராய்ச்சி
தன்னில் தானானால் ஆளலாம் அரசாட்சி
மனிதனை ஏமாற்றும் மனசாட்சி
அதில் இல்லை என்றும் முழு தேர்ச்சி!

ஞானம் பயிலும்போது பொங்கும் திகழ்ச்சி
ஞானம்மாயை கலைந்தால் எங்கும் மகிழ்ச்சி
பேதமெனும் மாயை திரை பெரும் காட்சி
காட்சி பொருள் காணும்பொருள் யாவும் மருட்சி!

மருட்சி நீக்கும் அருமருந்தே (அருவுரு)குரு திறட்ச்சி
குருவில் நீ அழிந்தால் தோன்றும் ஏகத்துவப் புரட்சி
தேர்ச்சி பல உண்டெனினும்
குரு அருள் அடைவதே பரிபூரணத் தேர்ச்சி!

- எஸ்.சேக்தாவுது மன்னார்குடி