துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 27.05.2010 அன்று வியாழன் மாலை மஃரிப் தொழுகை;குப்பின் இராத்திபு ஓதப்பட்டது.சபையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
இஷா தொழுகைக்கு பின்னர் புதுக்கோட்டை இளைய இசைமுரசு E.M.பாட்ஷா அவர்களின் இஸ்லாமிய இன்னிசைக் கச்சேரி நடைப்பெற்றது.
இன் நிகழ்ச்சியில் நாகூர் கவிஞர் சலீம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
மற்றும் தேரிழை தாஜிதீன் அவர்களும், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் அப்துல்கதீம், வாணாதிராஜபுரம் முஹம்மது ஹனீபா, திட்டச்சேரி ஜெகபர் சாதிக் பைஜி மற்றும் பல அமைப்பிலிருந்தும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார்கள்.
பாடகர் இளைய இசைமுரசு E.M.பாட்ஷா அவர்களுக்கும் நாகூர் கவிஞர் சலீம் அவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
புகைப்படங்கள் - மதுக்கூர் ராஜாமுஹம்மது