துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் சங்கைமிகு இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்களின் துபாய் விஜயத்தில் தினசரி மாலை மஹ்ஃரிப் தொழுகைக்குப்பின் தொடர் மஜ்லிஸ் நிகழ்ச்சி தினமும் நடைப்பெறுகிறது.
இன்றைய மஜ்லிஸில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது.அது சமயம் துபாய் அரசு அதிகாரியான மதிப்பிற்குரிய அப்துல்ரஹ்மான் அல் ஜரார் - (டைரக்டர் ஆப் டெக்கினிகல் எஜூகேஷன் கெவர்மெண்ட் ஆப் அவுக்காப் துபாய்) அவர்கள் சங்கைமிகு ஷெய்குனாவை வரவேற்பதற்கு மஜ்லிஸிற்கு வருகை புரிந்தார்கள்.
சங்கைமிகு இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானாவிற்கு தித்திக்கும் அருள்மறையாம் திருமறையை அவர்களுக்கு வழங்கி வரவேற்றார்கள்.
அங்கு தமிழில் நடைப்பெற்ற மஜ்லிஸில் அமர்ந்து ஆர்வத்துடன் சொற்பொழிவைக் கேட்பதற்கு ஆன்மீக சகோதரர்களுடன் பணிவுடன் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்களும் கீழே அமர்ந்துக் கொள்ள சங்கைமிகு செய்குனா இருக்கையில் அமரும்படி வலியுறுத்தினார்கள்.
நான் தமிழில் உரையாற்றுகின்றேன் எனக் கூறியதும் உங்களின் அருளான உரை எந்த மொழியானாலும் இறையருளால் எனக்கு விளங்கும் என்று பவ்யமாக கூறி ஆர்வத்துடன் உபநியாசங்களை கேட்கலானார்கள்.
மஜ்லிஸ் நிகழ்ச்சிக்குப்பின் சங்கைமிகு ஷெய்குனாவுடன் அலாவினார்கள்.
இன் நிகழ்ச்சியில் அடமங்குடி அப்துல் ரஹ்மான் மற்றும் அவரின் இளவல்களுடன் கலந்துக் கொண்டார்.