Monday, February 15, 2010

மதி பிறந்தநாள்


பன்னிரெண்டு நாளிது
பதிப் பிறந்த நாளிது
மண்ணுயிர்களுக் கெல்லாம்
மதிப்பிறந்த புனித மாதமான ரபீஉல் அவ்வல் பிறை 1ல்

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களின் புனித புகழ்பாக்களான சுப்ஹான மௌலுது நிகழ்ச்சி துவங்கியது.



நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் ஆன்மீக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

மௌலுதுக்குப் பின் மதுக்கூர் முஹம்மது தாவுது நபிப்புகழ் பாடல்களை பாடினார்.

நிர்வாகத் தலைவர் A.P.சஹாபுதீன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

இஃஷா தொழுகைக்கு பின்னர் முப்பது தினங்களுக்கு மௌலுது நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.