Thursday, November 5, 2009

புனித விசால்தின நிகழ்ச்சி


குதுபுல் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாசீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் உஸைனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்களின் 45வது வருட விசால் கந்தூரிதினம் 4/11/2009 புதன் மாலை வியாழன் இரவு மிக சிறப்பாக நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள திருமுல்லைவாசலில் நடைப்பெற்றது.

கந்தூரி விசால் தினத்தை துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 5.11.2009 வியாழன் மாலை வெள்ளி இரவு இஷாத் தொழுகைக்குபின் பெரியநாயகத்தின் புகழ்மாலை ஒதப்பட்டது.
பின்னர் விழா ஆரம்பமானது.
இவ்விழாவில் மௌலானாமார்கள் கலந்துக் கொண்டார்கள்....

திண்டுக்கல் நூருல்ஹக் அவர்கள் கிராஅத் ஒதி விழாவை துவங்கினார்.

ஹ+வல் வுஜ+து பாடலை சிராஜ்தீன் பாடினார்....அந்தபாடலுக்கான தமிழில் விளக்கத்தை அமீர்அலி கூறினார்

பாடகர் மதுக்கூர் முஹம்மது தாவூது ஞானப்பாடல் பாடினார்கள்...
இக்கூட்டத்திற்கு பொதுச்செயளாளர் A.N.M.முஹம்மது யூசுப் தலைமைத்தாங்கினார்...
துவக்க உரையாக முஹம்மது யூசுப் அவர்கள் விழாநாயகரைப்பற்றியும் பெருமானார் (ஸல்அலை)அவர்களின் வாழ்க்கை முறையுடன் ஒப்பிட்டு உரை நிகழ்த்தினார்.


மன்னார்குடி ஷேக்மைதீன் உரையாற்றுகையில் மகான்களின் மகத்துவத்தை விளக்கினார்...


சித்தமருத்துவர் மாலீக் அவர்கள் குருவைப்பற்றியும் குருமருந்தின் தன்மையைப்பற்றியும் விவரித்து பேசினார்.


ஏகத்துவமெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் A.P.சஹாபுதீன் பேசுகையில் பெரிய நாயகத்தின் பிறப்பு மற்றும் அவர்களின் தொண்டு இவைகளை விவரித்தார்...



துணைத்தலைவர் அப்பாஸ் ஷாஜகான் பேசுகையில் விழாநாயகரைப்பற்றி செய்குனா கூறிய பல நிகழ்ச்சிகளை விவரித்தார்...


துணைத்தலைவர் காதர்ஷாகிப் உரையாற்றுகையில் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் மகான்களின் மூலம் அவர் பெற்ற நன்மைகளைபற்றியும் விவரித்தார்...


கிளியனூர் இஸ்மத் பேசுகையில்
மகான்களிடம் ஞானங்களை நாம்பெறவேண்டும் வெறும் நோய்களுக்காகமட்டும் அவர்களிடம் நாம் போய் நிற்கக்கூடாது என்று வழியுறுத்திபேசினார்....

வீடியோ காட்சிகள்




இறுதியாக மதரஸா வளர்ச்சிப் பணிக்காக ஆர்வத்துடன் செயலாற்றிய பல ஆன்மீக சகோதரர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது....










பின் துவாவுடன் இன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது...
அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது...