ஒரு அமானிதத்தை எடுத்து மிருகங்கள் மரங்கள் மலைகளிடம் சுமக்க முடியுமா…?என இறைவன் கேட்டதற்கு அவைகள் மறுத்துவிட்டன.ஆனால் மனிதன் அவற்றை சுமந்து அநியாயக்காரனாகவும் மூடனாகவும் திரிகிறான் என்று திருக்குர்ஆனில் சொல்லப்படுகிறதே அதன் விளக்கம் என்ன..?
மிருகங்கள் என்பது அது மிருகங்கள்தான். ஆனால் இரண்டுகால் மிருகத்தைவிட நான்கு கால் மிருகம் மிகவும் சிறந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
அது அப்படியே இயற்கையிலேயே இருக்கிறது.அதற்கு ஒன்றும் தெரியாது.ஏதாவது ஒன்றில் முட்டினாலும் அதற்கு தெரியாது.
ஆனால் மனிதனுக்கு இறைவன் கொடுத்திருப்பது பெரிய அமானிதம் எதுவென்றால் அறிவு. மனிதன்அறிவை சுமந்திருக்கிறான்.அவனிடம் இருக்கக் கூடிய ஒவ்வொரு உறுப்புகளும் அறிவுடையதாகும் விஷயமுடையதாகவும் இருக்கிறது. அதிலிருந்து எல்லா நன்மைகள் தீமைகள் பெறக்கூடியவனாகவும் மனிதன் இருக்கிறான்.
மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று இறைவன் வரையறுத்துள்ளான்.அதற்கு மாற்றமாக ஒருவன் நடந்து விட்டானென்றால் அவனுடைய அமானிதத்தை இழந்துவிடுகிறான்.
எல்லாவகையிலுமே மனிதன்தான் முக்கியமானவன்.அவனுக்கு எல்லா அறிவையும் இறைவன் வழங்கியிருக்கிறான்.
கொடுத்த அமானிதத்தை மனிதன் காப்பாற்ற வேண்டும்.அவன் இறைவனுக்கு மாற்றமாக நடந்துக் கொண்டால் ஆபத்து உண்டாகும்.
மனிதனிடம் அறிவுகள் இருந்தும் அதை விளங்காமல் கேடுகளை சுமந்துக் கொண்டிருக்கிறான்.
மனிதனுக்கு தடுக்கப்பட்டதை உண்ணுகிறான் குடிக்கிறான் ஏனென்றால் அவன் அந்த உண்மையை விட்டுவிட்டான். ஆபத்தான விசயங்களை செய்யக்கூடிய நிலமை வந்துவிட்டது.
அமானிதம் என்று சொன்னால் என்ன…?
இறைவன் தன்னுடைய இரகசியத்தை மனிதனுக்குதான் கொடுத்திருக்கிறான்.ஆனால் மனிதன் அதை மறந்துவிட்டான்.
- இமாம் கலீல்அவன் மௌலானா