Wednesday, September 9, 2009
கண்ணியமிக்க கலீபா முஹம்மதுகாலிது
கண்ணியமிக்க கலீபா முஹம்மதுகாலிது அவர்கள் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் முப்பது ஆண்டுகளாக செயல்பட்டுவந்தாரகள்;. 10.09.2009 அன்று அமீரக வாழ்க்கையை முடித்துக் கொண்டு தாயகம் நோக்கி பயணம் மேற்கொள்ள இருக்கிறாரகள்.
இவர் சிறுவயதில் பர்மா சென்று கல்வி பயின்றவர். பல நூல்களைப் படித்தவர் ஆங்கில புலமையில் கைதேர்ந்தவர்கள். பல சகோதரர்கள் இவர்களிடம் ஆங்கிலம் பயின்று இன்று வங்கிகளிலும் அலுவலகங்களிலும் பொறுப்பான பதவி வகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏகத்துவஞானத்தின் மீது அதிகமான தேட்டம் கொண்டவர். பல குருமார்களைத்தேடி அலைந்து தேடலின் முடிவை இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்களிடம் கண்டு தன்னை முழுமையாக ஒப்படைத்தவர்கள்.
இவரை நடமாடும் நூலகம் என்றும் பல்கலைக்கழகம் என்றும் அடைமொழியுடன் அழைப்பதுண்டு.
எந்த ஒரு சப்ஜக்டைப்பற்றி கேட்டாலும் அதைக்கற்றி மிக துல்லியமாக விளக்ககூடியவரகள்;.
ஞானசந்தேககங்களுக்கு ஞானியைப்போன்று பதிலலிக்கக்கூடியவர். இவர் நடமாடும் ஞானியும் ஆவார்.
தான் என்ற அகந்தையோ கர்வமோ துளியும் இல்லாத மனிதர். இவர்களிடம் தன்னடக்கமும் குழந்தைத்தனமான பாசமும் மிகைத்து அதை எல்லோரிடத்திலும் காட்டக்கூடியவர்கள்.எளிமைமிக்கவர்கள்.
பிறருக்கு ஞானத்தை எத்திவைப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அதற்காகவேண்டி தன்னுடைய ஓய்வுநேரத்தை தியாகம் செய்தவர்.
இவரின் விளக்கத்தை கொண்டு பலர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள். அதில் நானும் ஒருவன்.
இருபது ஆண்டுகளுக்கு முன் வஹ்ஹாபியிசத்தில் மிக ஈர்ப்புக் கொண்டு அதில் தீவிரமாய் செயல்பட்டுக் கொண்டிருந்த என்னை கிளியனூர் முஹம்மது சபிர் அவர்கள் கண்ணியத்திற்குரிய கலிபா காலிது அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
அச்சமயம் பல தர்க்கங்களை அவர்களோடு நான் செய்திருக்கிறேன்.
திருக்குர்ஆன் ஹதீஸ்களைக் கொண்டு பல வினாக்களை அவர்களிடம் வைத்து வினவியபோது மிக அறிவிப்பூர்வமான பதில்களை எடுத்துக் கூறி ஞான விளக்கங்களை எனக்களித்துள்ளார்கள். சுமார் இரண்டு ஆண்டுகளாய் அவர்களிடம் பல சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
என்னைப்போன்ற பல ஞான வேட்கை உள்ளவர்களுக்கு இன்றளவும் ஞான விளக்கங்களை அளித்துக் கொண்டு வருபவர்.
இவர்களின் அமீரக வாழ்க்கையை முடித்துக் கொண்டு தாயகம் செல்ல இருப்பதையொட்டி செப்டம்பர் 8ம்தேதி மதிப்பிற்குரிய ஆன்மீக சகோதரர் வாவாமுஹம்மது அவர்களின் பத்ருஇல்லத்தில் அவர்களுக்கு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அந்த விழாவில் திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா, முஹம்மது யூசுப், முஹம்மது தாவூது, சாகுல்ஹமீது ,அன்வர்உசேன் ,ஹாஜாஅலாவுதீன் ,சிராஜ்தீன், அப்துல்ஹகது மற்றும் பலர் கலந்து சிறப்பித்தர்கள்.இந்த விழாவை மிகச்சிறப்பாக வாவாமுஹம்மது செய்திருந்தார்..
கண்ணியமிக்க கலிபா காலிது அவர்களின் சேவையை யாராலும் மறக்க முடியாது. இவர்கள் தாயகம் சென்று அவர்களின் உடல்நிலையை நன்றாக கவனித்து சுகம்பெற்று மீண்டும் துபாய் வரவேண்டும் என்று பலரும் அவாகொண்டுள்ளார்கள்.
மீண்டும் துபாய் வரவேண்டும் என்று சங்கைமிக்க ஷேய்குனா அவர்களும் திருவாய் மலந்துள்ளார்கள்.
எல்லாவளமும் பெற்று உடல்சுகத்துடன் நீடோடி வாழ துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினர் அனைவரும் துவாச் செய்கிறோம்.