Tuesday, September 8, 2009

மறைஞானம் போதிக்கும் மஹான் மனிதக்கடவுளா...?....2


குதுபு நாயகம் பாடல்களின் கருத்து தெரியாதவன் திண்டாடுவான். அவர்கள் நிறையச் சொல்லியிருக்கிறார்கள்.
குர்ஆனை நாம் நினைத்தப்படி வாசித்தால் சரிவருமா…? குர்ஆனிற்கு நாம் நினைப்பது போன்று பொருள் எழுத முடியாது. மித்தம் கவனத்தோடு மித்தம் சிந்தனையோடு நாங்கள் எழுதவேண்டும்.
ஏனென்றால் ரசூல் (ஸல் அலை) அவர்கள் ஹதீஸில் குர்ஆனிற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அதைக் கொண்டுதான் குர்ஆனிற்கு விளக்கம் எழுத வேண்டும்.
ஞானம் என்பது ஒரு தனிப் பகுதி. எல்லாம் தெரியும் என்று யாரும் சொல்ல முடியாது. காரணம் கவிதை முறைகள் அப்படித்தான் இருக்கும். ஞானம் பற்றிய கவிதை ஒரு தனியான அறிவு. இப்படி பேசும் சந்தர்பத்தில்தான் அதற்குண்டான விளக்கங்கள் தெரியும்.
சில பாடலகளில் சில சொற்கள் இருக்கும் அது வரியின் தேவையை நிரப்புவதற்காக அன்றி பொருள் இருக்காது. அசைநிறை எனச் சொல்வார்கள்.
‘என்கொல் வெகுண்டதென்றான்” எனத் தமிழில் வருகிறது. வெகுண்டது + என்றான் - ஏன் கோபப்பட்டாய் என்றான் என்பது பொருள். கொல் என்பதற்கு பொருளில்லை . கொல் என்பதற்கு பொருள் எடுத்தால் அர்த்தம் இல்லை.
இலக்கிய பாடல்களைவிட ஞானப்பாடல்கள் மிகவும் கஷ்டமாக இருக்கும் . அதற்கென்ற தனி இலக்கியம் இலக்கணம் . அதற்கு பொருள் எடுப்பதில் மித்த கவனமாக இருக்கவேண்டும். இதைத்தான் ‘ஸிராத்துல் முஸ்தகீன்’ பாலம் என்பது.
சபைக்கு வருபவர்கள் அனைவரும் உண்மையை விளங்கிக்கொள்ளுங்கள். உண்மையை விளங்கியவர்களில் அதிகம்பேர் (சபையில்)உள்ளனர். எல்லாம் தெரியும் என்று மலையை முட்டினீர்கள் என்றால் தலைதான் உடையும்.
மலையது மலையாகவே இருக்கும். அரபியில் பைத்தொன்று உள்ளது

“யாநாதிகள் ஜபலில் ஆலி லியுக்லிமஹீ
இர்ஹம் அல்ராஸி
லாதர்ஹம் அலல்ஜபலி”

யாநாதிகள் என்றால் - முட்டுவது
ஜபல் - என்றால் மலை
ஆலி – என்றால் மிகப்பெரிய
லியுக்லிமஹீ – என்றால் மலையை தூளாக்க

மிகப்பெரிய மலையை தூளாக்க முட்டுகிறவனே எனப் பொருள். இதுவரை இவரை முட்டாள் எனச் சொல்ல முடியாது.

இர்ஹம் - நீ இரக்கப்படு
அல்ராஸி – உன்னுடைய தலையின் மீது - இப்போது இவன் முட்டாள்
லாதர்ஹம் - நீ இரக்கப்படாதே
அலல் ஜபலி – மலைஉடையுமென்று.

எவ்வளவு அழகான பைத். இவற்றை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிந்தனையில்லாதவர்கள் என்றால் யார்…? மூளையில்லாதவர்கள்.

குர்ஆனில் வெளிரங்கத்தில் ஒன்று இருக்கும் ஆனால் அல்லாஹ்வால் சொல்லப்பட்டது அது அல்ல. ஆங்கிலத்தில் idioms எனச் சொல்வார்கள் . மரபுச் சொற்சொடர்கள். உவமைக்கு a pull up the eye என்பதற்கு ஒரு விருப்பமான அன்பான பையன் என்று பொருள். இதன் அர்த்தத்தை அப்படியே எடுத்தால் நிறைய வித்தியாசம் உண்டு.

எங்களுடைய பழைய கலீபா ஒருவர் குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை எழுதி வாப்பா இதன் விளங்கவில்லையென்று கூறினார்.
மற்றவர் சொல்கிறார்கள் ரசூலுல்லாஹ் எவ்வளவுதான் கப்ரில் உள்ளில் இருப்பவர்களிடம் பேசினாலும் யாரும் ஏன் என்று கேட்கமாட்டார்கள். என்று எழுதி அதற்குண்டான தமிழ் குர்ஆன் வசனத்தையும் சேர்த்து அனுப்பியிருந்தார். ஆனால் ரசூலுல்லாஹ் எவ்வளவோ கபர்களில் நின்று (இறந்தவர்களுக்காக)கஷ்டப்படுகிறார் என்று அவர்களுக்காக துவா செய்துள்ளார்கள். குதுபு நாயகம் வாழ்விலும் இப்படி உண்டு. ஆனால் தமிழ் தப்ஸிரோ இந்தக் கருத்தைச் சொல்கிறது.

அரபி தப்ஸிரை பார்த்தால் அதுச் சொல்வது எவனுடைய மனம் இருட்டாக உள்ளதோ அவனிடம் நீங்கள் எவ்வளவுதான் சொன்னாலும் அவனதை ஏற்றுக் கொள்ளமாட்டான். கப்ர் என்றால் இருட்டடைந்த மனம் என்று பொருள். மனம் இருட்டறையாக உள்ளது.

நான் என்ற பெருமையை எவன் விடுகிறானோ அவன்தான் மனிதன். தனக்குத்தான் தெரியும் என நினைத்து ஒரு தர்க்க மேடைக்கு ஒருவர் செல்வாரேயானால் அவர் அவ்வளவுதான். அந்தக் கூட்டத்தில் விஷயம் தெரிந்த ஒருவர் இருந்தால் அவர் பேசுவதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்வார். எல்லோருக்கும் ஒரு மைனஸ் பாய்ண்ட் இருக்குமே. இரண்டு நிமிடத்தில் அவரை தோற்கடித்துவிடுவார்.

ஞானிகள் சொல்கிறார்கள் ஒரு ஷெய்கிடம் நீங்கள் சென்றால் உங்கள் அளவோடு செல்லவேண்டும். குடம் நிறைய நீர் இருந்தால் ஊற்ற ஊற்ற கீழேதான் செல்லும். ஆகையால் வெறுங்குடமாய் இருக்கவேண்டும்.

ஆரம்பக்காலத்தில் ஷெய்குமார்கள் அல்லாஹ்வை அறிய வருபவர்களிடம் ஷெய்கு சொல்வது எல்லாம் சரியென்ற நிலைக்கு கொண்டுவருவார்கள். ஒரு கடைக்குச் சென்று ஒரு சாமானை கொண்டுவா என்றால் கொண்டுவரவேண்டும். அங்கு இல்லை என்றால் வேறு கடைக்குப் போகலதமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. எப்படியாவது எங்கேயாவதுச் சென்று கொண்டு வர வேண்டும். அந்த அளவிற்கு ஹித்மத் செய்யக் கூடியவராக அவரை மாற்றி அடிமையாக்கி அதாவது சொல்கிற விஷயத்தையெல்லாம் கேட்கக்கூடியவராக மாற்றிய பின்புதான் அல்லாஹ்வை பற்றிச் சொல்வார்கள்.
இப்பொழுது பைஅத் என்றால் மொத்த வியாரகடைக்குச் சென்று கருவாடு வாங்குவது போன்று.
ஒரு சபையில் முரீதாக இருப்பவர்கள் கெட்டுப்போவது காரணம் இதில்தான்.
நல்லவர்கள் நல்லவர்களாகவே இருப்பார்கள். எந்த நிலையிலும் சபைக்குச் செல்லவேண்டுமென்ற எண்ணம் வரும். அது அவர்களுடைய நன்மையும் நல்ல எண்ணமும் நல்ல குணமும் தாய் தந்தையர் பழக்கிய முறையும்.
(முரீத்) பிள்ளைகள் எல்லாம் அந்தமாதிரி நிலைக்கு வந்துவிடவேண்டும்.
ரசூலுல்லாஹ்வின் காலத்திலும் அவர்களுடைய இடத்தை விட்டு ஒடியவர்கள் உண்டு. அந்தக் காலத்தில் நடந்தது இப்பவும் நடக்கிறது. ஆகையால் அதை ஏற்றுக் கொள்ளனும் நாங்கள்.

அல்லாஹ் எல்லோருக்கும் நல்ல வாழ்வைத்தந்து ஆபத்துக்கள் துன்பங்கள் கஷ்டங்கள் கொடிய நோய்கள் உயிர் கொல்லக்கூடிய நோய்கள் எதுவும் உங்கள் யாரையுமே அணுகாது. அல்லாஹ்தால முழுமையாக பாதுகாத்து சந்தோசத்துடனும் உங்கள் நாட்டங்களை யெல்லாம் நிறைவேற்றி நிறைந்த செல்வத்தை தந்து நல்ல பொருளாதாரத்தை தந்து மேன்மையுடன் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்…!