கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மீலாதுநபி பெருவிழா மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் சார்பாக 19/02/2012 ஞாயிற்றுக்கிழமை பெரியப்பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
காலை 10.00 மணிக்கு சுப்ஹான மொலிது நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊர்ஜமாஅத் நிர்வாகிகளும் மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை கலீபாக்களும் முன்னிலை வகித்தனர்.
மதுக்கூர் அனைத்துப் பள்ளிகளின் இமாம்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.
ஜனாப் ஷாஜகான் உலவி பாஸில் ரசாதி கோயமுத்தூர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஏரளமானனோர் கலந்து சிறப்பித்தார்கள்.
மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் கமிட்டியின் பொருளாளர் M.K.M.அப்துல்கரீம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
நிறைவாக துஆ ஸலாவாத்துடன் இனிதே சிறப்புக்குரிய விழா நிறைவடைந்தது. அனைவருக்கும் தப்ரூக் உணவு வழங்கப்பட்டது.
தகவல்-
Er.A.இத்ரீஸ் ஹக்கியுல்காதிரி
மதுக்கூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை