1.இழிவுகள் அழிய வேண்டு மென்பதே தங்கள் பேராசையா!
2.பிறருக்கு உதவி வாழ வேண்டு மென்பதே தங்கள் பேராசையா!
3.பிறரின் பொருளை பாதுகாக்க வேண்டு மென்பதே தங்கள் பேராசையா!
4.உண்மை மட்டுமே பேசி வாழ வேண்டு மென்பதே தங்கள் பேராசையா!
5.ஒற்றுமையாய் அனைவரும் வாழ வேண்டு மென்பதே தங்கள் பேராசையா!
6.உறவினர்களை பேணி வாழ வேண்டு மென்பதே தங்கள் பேராசையா!
7.இறைவனை அறிந்து வாழ வேண்டு மென்பதே தங்கள் பேராசையா!
8.சிலை வணக்கம் ஒழிய வேண்டு மென்பதே தங்கள் பேராசையா!
9.யாரும் சொல்லித்தராத இறை அறிவு பெறுவதே தங்கள் பேராசையா!
10.எல்லோருக்கும் உண்மை சொல்லித்தர வேண்டு மென்பதே தங்கள் பேராசையா!
11.வியாபாரத்தில் நேர்மை வேண்டு மென்பதே தங்கள் பேராசையா!
12.விதவைத் திருமணம் செய்து வாழ வேண்டு மென்பதே தங்கள் பேராசையா!
13.இறைவன் ஒருவன் என்பதை உலகமெல்லாம் ஒலிக்க செய்ததே தங்கள் பேராசையா!
14.துன்பங்கள் வந்தாலும் சோர்வதில்லை யென்பதே தங்கள் பேராசையா!
15.தன்னை ஏற்று கொண்டவர்களைக் காப்பதே தங்கள் பேராசையா!
16.மண், பெண், பதவியோ தம் உறுதியைக் குலைக்காது என்பதே தங்கள் பேராசையா!
17.உலகத்தில் அடிமை வாழ்வை ஒழிக்க வேண்டு மென்பதே தங்கள் பேராசையா!
18.எத்தனைக் கஷ்டங்கள் வந்தாலும் ஏற்றபணியைச் செய்து முடிப்பதே தங்கள் பேராசையா!
19.மனிதர்களை மன்னித்து வாழ வேண்டு மென்பதே தங்கள் பேராசையா!
20.கொலை செய்யவந்தவனையும் கருணையுடன் காண்பதே தங்கள் பேராசையா!
21.செயல்பாட்டில் வெற்றி தோல்வி பாதிக்காமல் வாழ்வது தங்கள் பேராசையா!
22.குறிக்கோளை நிறைவேற்ற எதை இழக்கவும் தயாரவதே தங்கள் பேராசையா!
23.ஏற்ற உண்மை கொள்கைக்காக சொந்த ஊரைத் துறப்பதும் தங்கள் பேராசையா!
24.ஏழைகளும் இன்புற்று வாழ வேண்டு மென்பதே தங்கள் பேராசையா!
25.இறைவனோடு தாம் இருக்கிறோம் என்று எப்போதும் எண்ணுவதே தங்கள் பேராசையா!
26.போரில் கூட நீதி தவறாமல் நடப்பதே தங்கள் பேராசையா!
27.வெற்றியிலும் எதிரிகளை மன்னிப்பது தங்கள் பேராசையா!
28.தன்னோடு வாழ்பவரும் எல்லா நலமும் பெற உழைப்பது தங்கள் பேராசையா!
29.எதிலும் தீர்க்கமான நுண்ணறிவுடன் செயலாற்றுவது தங்கள் பேராசையா!
30.எதிலும் தொலைநோக்கு பார்வையுடன் செயலாற்றுவது தங்கள் பேராசையா!
31.அனாதைகளை ஆதரித்து வாழ வைப்பதுதே தங்கள் பேராசையா!
32.செல்வங்கள் முழுவதும் கிடைத்தாலும் அதை நீதியுடன் பங்கிடுவதே தங்கள் பேராசையா!
33.தன் துணைவி உறவினர்கள் துன்பங்கள் சகிக்க கற்று தருவதே தங்கள் பேராசையா!
34.மற்றவர்களுக்கு அதிகமாக தான் கஷ்டத்துடன் உழைப்பது தங்கள் பேராசையா!
35.கல் கொண்டு அடித்தாலும் கனிவுடன் தொலை நோக்கில் மன்னிப்பதே தங்கள் பேராசையா!
36.விலங்கினமே ஆனாலும் அதனுடனும் கருணையுடன் வாழ்வதே தங்கள் பேராசையா!
37.ஒப்பந்தத்திலும் நுண்ணறிவுடன் செயல்படுவதே தங்கள் பேராசையா!
38.பெற்ற மகளே ஆனாலும் நீதியுடன் நடப்பதே தங்கள் பேராசையா!
39.தங்கள் மனைவி மக்களை உலகில் நீதியுடன் வாழ வைத்ததே தங்கள் பேராசையா!
40.தவறு செய்பவரின் நற்குணத்தை செயலைக் கண்டு மன்னிப்பதே தங்கள் பேராசையா!
41.உண்மையுடன் வாழ உலக மக்களை உங்களை நேசிக்க வைத்ததே தங்கள் பேராசையா!
42.தலைவராய் இருந்தாலும் தோழராய் பழகுவதே தங்கள் பேராசையா!
43.தலைவரே ஆனாலும் தான் போரில் கலந்துக் கொள்வதே தங்கள் பேராசையா!
44.தலைவரே ஆனாலும் அவரவரின் உரிமைக் காத்ததே தங்கள் பேராசையா!
45.தலைவரே ஆனாலும் மனிதர்களின் தனித்தன்மையை மதிப்பதே தங்கள் பேராசையா!
46.தலைவரே ஆனாலும் தகுதியானவர்களுக்கு பதவித் தந்ததே தங்கள் பேராசையா!
47.தலைவரே ஆனாலும் தோழர்களின் செயலை ஏற்று கொண்டதே தங்கள் பேராசையா!
48.எதைச் சொல்வதானாலும் தான் கடைப்பிடித்து பின்பு சொல்வதே தங்கள் பேராசையா!
49.தீமை செய்பவர்களுக்கும் நன்மையை நாடுவதே தங்கள் பேராசையா!
50.தன் நாட்டு மக்களை பாசமுடன் நேசித்ததே தங்கள் பேராசையா!
51.வெற்றியிலும் பணிவுடன் நடப்பது தங்கள் பேராசையா!
52.எதைச் செய்தாலும் அது இறைவனின் பொருத்தத்திற்காகவே செய்வதே தங்கள் பேராசையா!
53.தன்னைப் போன்ற தலைவர்களை உருவாக்குவது தங்கள் பேராசையா!
54.தன்னைப் போல் அனைத்தும் என்பதால் அனைத்தையும் காண்பதே தங்கள் பேராசையா!
55.தோழர்களின் திறமைகளை தக்கமுறையில் பயன்படுத்துவதே தங்கள் பேராசையா!
56.ராஜதந்திரங்கள் அனைத்தும் கடைப்பிடிப்பதே தங்கள் பேராசையா!
57.தன்தலைவனை மக்கள் தாங்களே தேர்ந்து எடுப்பதே தங்கள் பேராசையா!
58.மக்கள் உடல் வலிவுடன் மன வலிமையையும் சேர்த்து வைத்ததே தங்கள் பேராசையா!
59.முன்னோரின் நல் உண்மையை ஏற்று நடப்பதே தங்கள் பேராசையா!
60.தலைவர்கள் தன்நாட்டு செல்வத்தை தவறு செய்யாமல் உபயோகிப்பதே தங்கள் பேராசையா!
61.தன் உற்ற தோழரை தன் வாழ்நாள் முழுவதும் பேணியதே தங்கள் பேராசையா!
62.தனக்கு பிறகும் தன்வழி பேணுவதை விரும்பியதே தங்கள் பேராசையா!
63.இந்த உலகம் இன்புற்று வாழ உழைத்ததே தங்கள் பேராசையா!
யா! ரசூலுல்லாஹ்
உங்களின் இந்த எல்லா விருப்பங்களும் எங்களின் விருப்பமாக ஆக வேண்டும் என்று விரும்பினீர்கள் ஆனால் இன்றைய வாழ்வில் இவை அனைத்தும் தங்களின் பேராசையாக அல்லவா மாறிவிட்டது. தங்கள் விரும்பிய மனிதர்களாக எங்களையும் எங்கள் சந்ததியர்களையும் ஆக்கி அருள்பாளிப்பீர்களாக! தாங்கள் விரும்பிய உலகத்தையும் ஆக்கி அருள்வீர் யா! ரசூலுல்லாஹ்.
A.N.M.முஹம்மது யூசுப் M.A