மாநபியின் மாணிக்கமே
வரவேண்டும்-உங்கள்
மணம் நிறைந்த அருளினை
அண்ணலே தரவேண்டும்
ஆன்மீக ஞானம்தேடி
அலைபாயும் மனமே
ஆதரவாய் கரம் கொடுக்கும்
எம்குருவின் குணமே
கதியிழந்த உயிர்களுக்கு
மதிநிறைக்கும் மhமதியே
விதிதேடும் விடைகளுக்கு
வீதி தந்த ஒளிவிளக்கே
---- மாநபியின்
நான்-னை நான்-னென்று
நவிழ்கின்ற நாதரே
நான்-னில் நாயகனை
நயம் செய்த சீலரே
பூரணத்தை புரிந்துணர்ந்து
புயலாய் வந்த பூமானே
புறம்பொருள் நீக்கமற-எம்மை
புனிதராக்கும் எம்மானே
---- மாநபியின்
ஏகத்துவ உண்மையினை
ஏற்றிவைத்த தீபமே
ஏக்கங்கள் என்னிடத்தில்
ஏற்றம்செய்யும் எஜமானே
அண்ணலாரின் அகமியத்தை
அணிவகுத்த அற்புதமே
எண்ணுயார் எண்ணத்தை
வண்ணம் தந்த வான்மதியே
---- மாநபியின்
விஞ்ஞானம் பேசும் மனிதன்
விகமனம் மானதேனோ
மெய்ஞ்ஞானம் கற்றவருக்கு
அஞ்ஞானம் நுழைந்ததேனோ
பேரின்பம் படித்ததாய்
பெருமைகள் கொண்டதேனோ
சிற்றின்ப சீற்றத்திலே
சிறகுகள் ஒடிந்ததேனோ
---- மாநபியின்
ஞானக்கலையினிலே
மானம் படிக்கவேனும்
படித்த ஞானமதிலே
மனிதனாய் மலரவேனும்
குருவிடம் கற்றக்கல்வி
பெருநன்றி மறந்ததேனோ
குறைமதி பெற்றதினாலே
வருந்திடும் வாழ்க்கையோடும்
---- மாநபியின்
சத்தியத்தின் நாவினிலே
சத்தியம் பேசிடுமே
சத்துரு கனைகளிலே
சாம்பலாகி போகனுமே
சன்னதி வந்துவிட்டோம்
சரணானோம் சந்திரனே
சாந்தியும் தந்தருள்வீர்
சபையோர்க்கு சமுத்திரமே....
---- மாநபியின்
-
-
- விகமனம் - துர்நடத்தை
- சத்துரு---எதிரி