கடன் பெற்ற நண்பர் ஒருவர் இருந்தார்
திருப்பிச் செலுத்த நினைத்தாரில்லை
கொடுத்தவர் கேட்டார் கிடைத்த பாடில்லை
திரும்பவும் கேட்டார் கொடுத்தாரில்லை.
வழியேதும் உண்டோ என்றே நினைத்தார்
கேட்டும் கேட்டும் களைத்தே போனார்.
விட்டார் வேண்டாம் இனி அது என்றே
மறந்தே போனார் கொடுத்ததை அன்றும்.
காலம் என்றோ கடந்து போனது
கடன்பெற்ற நண்பர் உம்ரா பயணம்
இனிதே செல்ல ஒருங்கி நின்றார்
கடமைகள் யாதென ஆராய்ந்தார்
பெருமானார் வாக்குகள் பொட்டில் தெறிக்க
கடன்களை கொடுத்தல் வேண்டும் என்றே
கொடுக்கவேண்டியவை நினைத்தே நின்றார்
என்றோபெற்ற கடனின்நினைவை வரவே பெற்றார்
ஓடோடிச் சென்றார் நண்பரைக் கண்டார்
காலம்கடந்த கடனதனை அழகாய்க் கொடுத்தார்
தனக்குக் கொடுத்து உதவிய நண்பர்
மனமும் மகிழ மன்னிக்கக் கேட்டார்.
உம்ராசெல்கிறேன் துவாச் செய்க என்றார்
திரும்பப் பெற்ற நண்பர் நெகிழ்ந்தார்
மகிழ்ச்சியில் திளைத்தார் காரணம் கண்டார்
எம்பெருமான் (ஸல்) அவர்களுக்கு நன்றியை சொன்னார்.
என்றோ தந்திட்ட அழகிய வழிமுறை
இன்று அவர்க்குப் பலனை தந்தது
இன்னும் எவருக்கும் தந்துகொண்டிருக்கும்
நன்றியுள்ள மனிதரே நன்றி சொல்வீர்
ஸல்லல்லாஹு அலாமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் !!!
M.A. சிராஜுதீன்.
துபை