Sunday, December 25, 2011

ஈமான் பற்றி பெருமானார் (ஸல்) அவர்கள்

பெருமானார் (ஸல்) அவர்கள் ஈமான் (நம்பிக்கை) பற்றிக் கூறும்போது
கீழ்வருமாறு கூறினார்கள்.

எவருடைய தந்தை பிள்ளை இன்னும் மனிதர்கள் அனைவரைவிடவும்
அவரிடத்து நான் மிக உகப்பானவனாகும் வரை உங்களில் ஒருவரும்
ஈமான் கொண்டவராகமாட்டார்.(புஹாரி,முஸ்லிம்,கிரந்தங்களிலிருந்து
-அனஸ் (ரலி) அவர்களின் ரிவாயத்து) அதாவது எவருடைய தந்தை
பிள்ளை இன்னும் மனிதர்கள் அனைவரைவிடவும் என்னை நேசிக்காதவரை
உங்களில் ஒருவரும் ஈமான் கொண்டவராக முடியாது என்பதே.
அப்படியாயின், ரசூல் நாயகம் அவர்களைப் புகழ வேண்டாம் என்பவனும்
அவர்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை உபயோகிப்பவனும்
எவ்வாறு ஈமான் கொண்டவனாகலாம்.

"நீங்கள் ஈமான் கொண்டவர்களாயின் அல்லா(ஹ்)வுக்கும் அவருடைய
ரசூலுக்கும் வழிபடுங்கள் என அல்லாஹூதஆலா கூறுகிறான்".
(அன்Fபால்:47)

"எவன் அல்லா(ஹ்)வின் தூதருக்கு வழிபடுகிறானோ அவன் நிச்சயமாக
அல்லா(ஹ்)வுக்கு வழிபட்டான்".
(நிஸாஉ:79)


நன்றி:மறைஞானப்பேழை மாதஇதழ்.