Thursday, December 22, 2011

பூரண சந்திரர் எங்கள் நாயகம்!


பெருமானார் அவர்களின் சிறப்பான கரங்களை குலுக்க வருவோரோடு
(தொட்டு முத்தமிட வருவோரோடு) கை குலுக்குவார்கள்.நூதனமான
(நர்ஜிஸ்,யாஸ்மின் போன்ற) பூக்களின் வாடை நாளெல்லாம் அக்கரங்களில்
பரிமளிப்பதைக் காண்பர்.(உணர்வர்)

பெருமானார் சிறுவரின் தலையில் கை வைப்பார்கள்.பெருமானார் அவர்களை
தொட்டமையால் சிறுவர்களுக்கிடையே மணம் பரிமளிக்கும். மேலும்
இந்நிகழ்ச்சியினை சிறுவர்கள் நயந்து நடப்பர். (மேலும், இது சிறுவர்கள் மத்தியில்
பிரபலமாகிவிடும்)

பூரண சந்திர இரவிலே சந்திரனின் பிரகாசத்தைப் போன்று சிறப்பான அவர்களின்
வதனம் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.

அவர்களை வருணிக்கிறவர் அவர்களுக்கு முன்னாலும் அவர்களுக்குப் பின்னாலும்
அவர்களைப் போன்ற ஒருவரை நான் கண்டிலேன் என்பார். மனிதரில் எவரும்
அவர் போன்ற ஒருவரைக் காணமாட்டார்கள்.

---சங்கைமிகு ஷெய்குநாயகம் அவர்களின் பர்ஸன்ஜிய் மவ்லித் மொழிபெயர்ப்பிலிருந்து...

இரண்டிலிருந்து ஒன்றிற்கு........

மிஹ்ராஜின் போது நாயகம் (ஸல்) அவர்கள் "ஸித்ரதுல் முன்தஹா" வில் ஜிப்ரீல் (அலை)
அவர்களுடன் உயர்ந்த போது இரண்டு என்ற நிலையில் இருந்து அங்கிருந்து ஒன்றான
நிலையில் ஹக்கில் கலந்தார்கள்.

---சங்கைமிகு ஷெய்கு நாயகம் அவர்கள்.

நன்றி -சிராஜிதீன் ஹக்கியுல்காதிரி துபாய்