பிரபஞ்ச்சத்தில் எல்லாமே அறிவு மயமாக விளங்குகிறது. ஒவ்வொரு பொருளிலும் அறிவு
நிரம்பித் ததும்பிய வண்ணம் இருக்கிறது . ஆனால் அதை அறிய ஆள் வேண்டுமே !
எல்லாமே அறிவாக இருந்தாலும் அது இன்னது தான் என அறியப்படாதிருப்பதால் அதற்கு
மகத்துவம் இல்லையே ! அதனால் பயம் இல்லையே! எனவே தான் அறியபடாதிருந்த அமா -
கன்ஜூல் மக்ஃபீ - அறியப்பட வேண்டுமென ஆசைப்பட்ட போது மனிதனை வெளியாக்கியது !
உதட்டில் பாதி போல ஒன்றாயிருந்த அது அடுத்த இதழான மனிதனை படைத்தபோது அது
பேசப்படும் பொருளாக மாறியது .எனவே படைப்பின் நோக்கமே அறிவாக மாறியது .அதனாலேயே
அறிவு அனைத்துக்கும் ஆதாரமானது .அதில் ஓரறிவு ,ஈரறிவு மூவறிவு ,நான்கறிவு ,ஐந்தறிவு ,
என வெளியானபோது முழுமையடையாமல் ஆறாவது அறிவு வகுக்கப்பட்ட போது அந்த
அறிவால் அது -இது என்ற வேற்றுமை உண்டானது .
இந்த வேற்றுமை நீங்கி ,மீண்டும் ஒன்று எனும் ஒற்றுமை ஏற்பட வேண்டுமே . அந்த ஆறறிவையே
மேலும் பட்டை தீட்டும் போது ஏழாம் அறிவு பிறந்தது .அந்த ஏழாம் அறிவே பூரணப்படும்
போது எட்டாம் அறிவான மெய்ஞ்ஞானம் எனும் பெயரை பெற்றது .
ஆறறிவு அனைவருக்கும் தெரியும்
ஏழாம் அறிவு ,எட்டாம் அறிவெல்லாம் இதற்கு முன் பேசப்பட்டதா? எமக்கு தெரிய வில்லை
இப்பொழுது ஏழாம் அறிவு என திரைப்படம் கூட வந்திருகிறது . ஆனால் புதுமைகள் சொன்ன
பூரண ரான சங்கையான செய்கு மார்கள் அவர்கள் இன்றைக்கு ஏறத்தாழ முப்பது ஆண்டு
களுக்கு முன்னரே தங்கள் ஞானப்பாடலில் ஏழாம் அறிவை பற்றி எட்டாம் அறிவை பற்றி
எல்லாம், அழகாக பாடி விட்டார்கள்
ஏழாம் அறிவை குறிப்பிட்ட வலிமார்கள் அது என்ன என்பதையும் விளக்கப் படுத்தியுள்ளார்கள்
ஏழாம் அறிவை அவர்கள் திருமறையில் கூறப்பட்ட பயான் எனும் விளக்க அறிவு என
விளக்குகிறார்கள் .
குரான் ஷரீஃபில் அர்ரஹ்மான் சூராவில் கலகல் இன்ஸான வ அல்லமஹூல் பயான்
அல்லாஹ் மனிதனை படைத்தான் மேலும் அவனுக்கு பயான் எனும் விளக்க அறிவை
கொடுத்தான் என இறைவன் அருளுகிறான் .
இந்த ஆயத்தில் ஓர் ஆழாமான நுட்பமும் மறைந்திருக்கிறது . அதாவது
இன்ஸானைப் படைத்தான் எனும் போது ஆறறிவுள்ள மனிதனைப் படைத்தான் என்பதும்
பயானைக் கற்றுகொடுத்தான் எனும் போது அது ஏழாவது அறிவை சுட்டிக்காட்டுவதையும்
உணர முடிகிறது ,
ஆறறிவு முதிர்ச்சி பெரும் போது ஏழாம் அறிவும் ஏழாம் அறிவு பூரணப்படும் போது எட்டான
மெய்ஞானமும் எழுகிறது என்பதும் விளங்குகிறது (புதுமைகள் பூக்கும் ).
நன்றி ஹுசைன் முஹம்மது ( மன்பயி )