Tuesday, November 1, 2011

செய்யிதுனா ஷெய்குனா

(மெட்டு - இதோ எந்தன்தெய்வம் முன்னாலே)

மறை வழி வந்த ஷெய்குனா முன்னாலே!

நான் கருவைக் காட்சியாய் கண்டேனே


மறை வழி வந்த ஷெய்குனா முன்னாலே!

நான் கருவைக் காட்சியாய் கண்டேனே

பணிவு கொண்ட கல்புகளே அறிந்து கொள்ளுமாம்- இதை

தனையறிந்த உள்ளங்களே ஏற்றுக் கொள்ளுமாம்.



பணிவு கொண்ட கல்புகளே அறிந்து கொள்ளுமாம்- இதை

தனையறிந்த உள்ளங்களே ஏற்றுக் கொள்ளுமாம்.



மறை வழி வந்த ஷெய்குனா முன்னாலே!

நான் கருவைக் காட்சியாய் கண்டேனே



அவர் தேடலுள்ள முரீதுக்குள்ளே மணப்பார்

தனைதுறந்த பேருக்குள்ளே இருப்பார்.

அவர் தேடலுள்ள முரீதுக்குள்ளே மணப்பார்

தனைதுறந்த பேருக்குள்ளே இருப்பார்.

அள்ளியள்ளி இறைபோதம் இறைப்பார்

இறையறிந்தால் உண்மையாக இருப்பார்!

அள்ளியள்ளி இறைபோதம் இறைப்பார்

இறையறிந்தால் உண்மையாக இருப்பார்!



பணிவு கொண்ட கல்புகளே அறிந்து கொள்ளுமாம்- இதை

தனையறிந்த உள்ளங்களே ஏற்றுக் கொள்ளுமாம்.



மறை வழி வந்த ஷெய்குனா முன்னாலே!

நான் கருவைக் காட்சியாய் கண்டேனே



பல வணக்கங்களால் நீயடையும் செருக்கு

பொது தர்மத்தினால் நீயடையும் புகழ்ச்சி

பிறர் புகழயிலே உனக்கிருக்கும் இன்பம்

இவையை துறத்திவிட்டால் கண்டிடலாம் ஷெய்கை

இவையை துறத்திவிட்டால் கண்டிடலாம் ஷெய்கை



மறை வழி வந்த ஷெய்குனா முன்னாலே!

நான் கருவைக் காட்சியாய் கண்டேனே



தன் இன்பத்திலும் துன்பத்திலும் ஷெய்கை

கண்டு உண்ணதமாய் வழி தொடரும் ஏழை

அவன்- உள்ளமதின் தேடலை நான் கேட்டேன்

அந்த தேடலிலே இறைவனை நான் பார்த்தேன்.

அந்த தேடலிலே இறைவனை நான் பார்த்தேன்.



பணிவு கொண்ட கல்புகளே அறிந்து கொள்ளுமாம்- இதை

தனையறிந்த உள்ளங்களே ஏற்றுக் கொள்ளுமாம்.



மறை வழி வந்த ஷெய்குனா முன்னாலே!

நான் கருவைக் காட்சியாய் கண்டேனே



-பைசான் மதீனா
காத்தான்குடி இலங்கை