இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக குடந்தை இதழியல் ஆசிரியரும் பேராசிரியருமான முஹம்மது உசேன் மற்றும் மௌலவி உசேன் மக்கி அவர்களும் ஊடகத்துறையாளர் முதுவை ஹிதயத்துல்லாஹ்வும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தார்கள்.
மிஉராஜ் நிகழ்வைப்பற்றி மௌலவி உசேன் மக்கி மற்றும் முஹம்மது உசேனும் மிக சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.
நன்றி உரையை பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் அவர்கள் நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.
கண்ணியமிக்க சையதுஅலி மௌலானா தலைமை உரை நிகழ்த்துகிறார்கள்
ஊடகத்துறையாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு அப்துல் வஹாப் நினைவு பரிசு வழங்குகிறார்
மௌலவி உசேன் மக்கி அவர்கள் மிஉராஜ் நிகழ்வைப் பற்றி உரை நிகழ்த்துகிறார்கள்.
குடந்தை இதழியல் ஆசிரியரும் பேராசிரியருமான முஹம்மது உசேன் அவர்களுக்கு மௌலானாமார்கள் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.
உரை நிகழ்த்துகிறார்கள் பேராசிரியர் முஹம்மது உசேன் அவர்கள்
நன்றி உரை நிகழ்த்துவது ஏ.என்.எம்.முஹம்மது யூசுப் அவர்கள்
புகைப்படங்கள் - முதுவை ஹிம்தாதுல்லாஹ்